குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால்

Added : அக் 08, 2021
Share
''பெண்களின் மார்பகத்தில் கட்டி வந்தாலே அது கேன்சராகதான் இருக்கும் என, முடிவு செய்து விடக்கூடாது,'' என்கிறார் கே.எம்.சி.ஹெச்., மார்பக புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபா ரெங்கநாதன். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்காரணம் என்ன?பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. இந்த பிரச்னை ஆண்களுக்கும் இருக்கிறது. இன்றைய
 குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால்

''பெண்களின் மார்பகத்தில் கட்டி வந்தாலே அது கேன்சராகதான் இருக்கும் என, முடிவு செய்து விடக்கூடாது,'' என்கிறார் கே.எம்.சி.ஹெச்., மார்பக புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபா ரெங்கநாதன். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்காரணம் என்ன?பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. இந்த பிரச்னை ஆண்களுக்கும் இருக்கிறது. இன்றைய நவீன வாழ்க்கை முறையும், உணவு முறையும் ஒரு காரணமாக இருக்கிறது. 80 சதவீதம் பேருக்கு உடல் பருமன், உடல் பயிற்சியின்மை, மது மற்றும் புகைப்பழக்கம் காரணமாக உள்ளது. சிலருக்கு மரபணு வழியாக வருகிறது.மார்பக பிரச்னையால் எந்த வயதுடைய பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?பொதுவாக வயது அதிகமாகும் போதுதான், மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. வெளிநாடுகளில் உள்ள பெண்களுக்கு, 50 வயதுக்கு மேல் மார்பக புற்றுநோய் வருகிறது. நம் நாட்டை பொறுத்தவரை 40 முதல் 50 வயதுடைய பெண்களே மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். திருமணம் ஆகாத பெண்களுக்கு மார்பக பிரச்னை வருகிறதா?கல்யாணம் ஆகாத, ஆன பெண்களை விட, குழந்தை இல்லாத பெண்களுக்குதான் மார்பக புற்றுநோய் வர அதிகம் வாய்ப்பு உள்ளது. காரணம், மார்பகம் கர்ப்பமாக இருக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும்தான் முழுமையாக வளர்ச்சி அடைகிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சிலருக்கு, சில ஹார்மோன்கள் சுரப்பதில்லை.அதுவே மார்பக புற்றுநோய்க்கு காரணமாக உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ரிஸ்க் குறைவு. ஆனால் ஐந்து குழந்தை பெற்று, பால் கொடுத்த பெண்ணுக்கும் மார்பக கேன்சர் வரலாம். அதனால், இதுதான் புற்றுநோய்க்கு வர காரணம் என, உறுதியாக சொல்ல முடியாது.சில பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்ப்பது சரியா?ஒரு தாய், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் தவிர்ப்பது, குழந்தையின் ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கும். கொடுக்காமல் இருப்பதால் தாய்க்கு எந்த நன்மையும் இல்லை. அதனால் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்க கூடாது. இன்றைக்கு தாய்ப்பால் குறித்து பெண்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு இருப்பதால், பெரும்பாலும் யாரும் தவிர்ப்பதில்லை.மார்பக புற்றுநோய் உள்ளதா என, தெரிந்து கொள்ள என்ன செய்யவேண்டும்?40 வயதை கடந்த பெண்கள், மார்பக பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மார்பில், வலி அல்லது கட்டி இருந்தால் தான், பரிசோதனை செய்ய வேண்டும் என்பது இல்லை. ஒரு பொது செக்கப் ஆண்டுக்கு ஒருமுறை செய்து கொள்வது அவசியம். மார்பகத்தில் எந்த வயதில் கட்டி இருந்தாலும் டாக்டரை பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் பார்த்து விட்டால் கட்டியை எளிதாக நீக்கி விடலாம். தவிர்த்து வந்தால் மார்பகத்தையே நீக்க வேண்டி வரும்.சிலருக்கு கட்டி இருந்தாலும் வலி இல்லாமல் இருப்பது ஏன்? பெண்களின் மார்பகத்தில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால் அதிகம் பிரச்னை வரும். வலி இல்லை என்றால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். அங்கு கட்டி வந்தாலே அது கேன்சராகதான் இருக்கும் என, முடிவு செய்து விடக் கூடாது. அங்கு கட்டி வரக்காரணம் என்ன என்பது குறித்து டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். அதற்கு பரிசோதனை அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X