சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'வாக்கிங்' செல்லும் பெண்கள் மீது கஞ்சா நபர்கள் கல் வீச்சு!

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:ரத்தினபுரி சம்பத் வீதியில், மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த பெண்கள், வயோதிகர்கள் அன்றாடம் காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடந்த சில தினங்களாக அங்கு மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள வரும் பெண்கள் மீது, செடி மறைவிலிருந்து இளைஞர்கள் சிலர், கற்களை வீசி தாக்குவதாகவும், இது குறித்து பூங்கா காவலாளியிடம்

கோவை:ரத்தினபுரி சம்பத் வீதியில், மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த பெண்கள், வயோதிகர்கள் அன்றாடம் காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடந்த சில தினங்களாக அங்கு மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள வரும் பெண்கள் மீது, செடி மறைவிலிருந்து இளைஞர்கள் சிலர், கற்களை வீசி தாக்குவதாகவும், இது குறித்து பூங்கா காவலாளியிடம் கூறினால் அவரும், 'இருட்டிருச்சு...தயவு செஞ்சு புறப்படுங்கம்மா. இனி இங்க நடக்க வராதீங்கம்மா' என்று பதற்றத்துடன் கூறுவதாக பெண்கள் சிலர் கூறுகின்றனர்.இது குறித்து விசாரித்த போது, மாலை நேரத்தில் பூங்காவுக்கு வரும் இளைஞர்கள் சிலர், செடிகளுக்கு இடையே மறைந்து கொண்டு, கஞ்சாவை சிகரெட்டில் ஏற்றி புகைப்பதாகவும், போதையில் தள்ளாடுவதாகவும் சொல்லப்படுகிறது. கஞ்சா புகைக்க தடையாக இருப்பவர்களை கல் எறிந்து அவர்கள் விரட்டியடிப்பதாகவும், காவலாளியை மிரட்டுவதாகவும் தெரியவந்துள்ளது. போலீசார் அப்பகுதிக்கு நேரடியாக சென்று விசாரித்து, போதை நபர்களை அப்புறப்படுத்த வேண்டும்; நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X