கோவையை ஏமாற்றிய தென்மேற்கு பருவமழை: நடப்பாண்டு சராசரியை விட 27 சதவீதம் குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையை ஏமாற்றிய தென்மேற்கு பருவமழை: நடப்பாண்டு சராசரியை விட 27 சதவீதம் குறைவு

Added : அக் 08, 2021
Share
கோவை:கோவையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை, 27 சதவீதம் சராசரியை காட்டிலும் குறைவாக பதிவாகியுள்ளதாக, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் தெரிவித்தார்.தமிழகத்தில், ஜூன் முதல் செப்., வரை தென் மேற்கு பருவ மழையும், அக்., முதல் டிச., வரை வட கிழக்கு பருவமழை காலமாகவும் உள்ளது.தென் மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், செப்., 30ம் தேதியுடன் முடிவடையும். ஆனால்,

கோவை:கோவையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை, 27 சதவீதம் சராசரியை காட்டிலும் குறைவாக பதிவாகியுள்ளதாக, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் தெரிவித்தார்.தமிழகத்தில், ஜூன் முதல் செப்., வரை தென் மேற்கு பருவ மழையும், அக்., முதல் டிச., வரை வட கிழக்கு பருவமழை காலமாகவும் உள்ளது.தென் மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், செப்., 30ம் தேதியுடன் முடிவடையும். ஆனால், நடப்பாண்டில் அக்., முதல் வாரம் வரை தொடர்கிறது.வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையத்தின் 30 ஆண்டுகால சராசரி ஆய்வின் படி, கோவையில் தென் மேற்கு பருவமழை, 209.4 மி.மீ., பதிவாகும். நடப்பாண்டில், 153 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது.இதுகுறித்து, பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:கடந்த, ஜூன் மாதம் 15 மி.மீ., ஜூலை 30.5 ஆக., 38.5, செப்., 33.5 மி.மீ., கூடுதலாக அக்., ( ஐந்து நாட்கள் மட்டும்) 35.5 மி.மீ., என மொத்தம் கோவையில் , 24 மழை நாட்களில் 153 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.கடந்த, 30 ஆண்டுகால சராசரியின் படி, கோவையில், 27 சதவீதம் நடப்பு தென்மேற்கு பருவமழை குறைவாக பொழிந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் குறைவாகவும், சிலவற்றில் அதிகமாகவும் மழை பதிவாகியுள்ளது.அதன்படி, தென் மேற்கு பருவ மழை, 11 சதவீதம் சராசரியை காட்டிலும் அதிகமாக பொழிந்துள்ளதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இவ்வாறு, ராமநாதன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X