பொது செய்தி

தமிழ்நாடு

புதிய நீர் மின் நிலையம்: தயாராகிறது அறிக்கை

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:கன்னியாகுமரியில் கோதையாறு, தேனியில் மணலாறு ஆகிய இடங்களில் அமைக்க திட்டமிட்டுள்ள, நீரேற்று மின் நிலையங்களுக்கு, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை, தமிழக மின் வாரியம் துவக்கியுள்ளது.நீலகிரி, கோவை, ஈரோடு, நெல்லை மாவட்ட வன பகுதிகளில், மின் வாரியத்திற்கு 2,307 மெகா வாட் திறனில் 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. சுற்றுச்சூழலை பாதிக்காத நீர் மின்சாரத்தின், 1 யூனிட்

சென்னை:கன்னியாகுமரியில் கோதையாறு, தேனியில் மணலாறு ஆகிய இடங்களில் அமைக்க திட்டமிட்டுள்ள, நீரேற்று மின் நிலையங்களுக்கு, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை, தமிழக மின் வாரியம் துவக்கியுள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, நெல்லை மாவட்ட வன பகுதிகளில், மின் வாரியத்திற்கு 2,307 மெகா வாட் திறனில் 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. சுற்றுச்சூழலை பாதிக்காத நீர் மின்சாரத்தின், 1 யூனிட் உற்பத்தி செலவு 50 காசுகளுக்கு கீழ் உள்ளது.இதனால், நீர் மின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

தற்போது, கோவையில் உள்ள காடம்பாறையில் மட்டும் நீரேற்று மின் நிலையம் உள்ளது. அதில், ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை, அதிக திறன் உடைய மோட்டார் பம்ப் வாயிலாக, மீண்டும் அணைக்கு எடுத்து செல்லலாம்.அந்த தண்ணீரை பயன்படுத்தி, எப்போது வேண்டுமானாலும் மின் உற்பத்தி செய்யலாம். மற்ற நீர் மின் நிலையங்களில் ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் பயன்படுத்த முடியாது.

மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, 'கன்னியாகுமரியில் உள்ள கோதையாறில் 500 மெகாவாட்; தேனியில் உள்ள மணலாற்றில் 500 மெகா வாட் திறனில் நீரேற்று மின் நிலையங்கள் அமைக்கப்படும்' என, சட்டசபையில், செப்., 7ல் அறிவித்தார்.

அந்த இரண்டு மின் நிலையங்கள் அமைய உள்ள இடங்களில், அதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள், மத்திய மின்சார ஆணையம் மற்றும் மத்திய நீர் ஆணைய வழிகாட்டுதலைப் பின்பற்றி தயாரிக்கப்பட உள்ளன.அறிக்கை தயாரிக்கும் பணி, தலா 59 லட்சம் ரூபாய் செலவில், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது. தகுதியான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மின் வாரியம், 'டெண்டர்' கோரி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X