அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை அறிவிப்புகளை செயல்படுத்த அறிவுறுத்தல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:புதிய அறிவிப்புகளை செயல்படுத்த விரைவாக அரசாணை வெளியிடும்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், 202 அறிவிப்புகள் சட்டசபையில் வெளியிடப்பட்டன. இவற்றை நடைமுறைப்படுத்த, அரசாணை வெளியிடப்பட வேண்டும். இதுவரை சில அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணை வந்துள்ளது. நிதி

சென்னை:புதிய அறிவிப்புகளை செயல்படுத்த விரைவாக அரசாணை வெளியிடும்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், 202 அறிவிப்புகள் சட்டசபையில் வெளியிடப்பட்டன. இவற்றை நடைமுறைப்படுத்த, அரசாணை வெளியிடப்பட வேண்டும். இதுவரை சில அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணை வந்துள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக, பல அறிவிப்புகளை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில், 2022 - 23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அப்போதும், புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும். எனவே, குறைந்த மாதங்களே உள்ள நிலையில், தற்போது சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை விரைவாக செயல்படுத்த வேண்டும்.எனவே, அனைத்து துறைகளிலும், அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிடவும், அதற்கான நிதியை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி, துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் அலுவலக செயலர்கள், ஒவ்வொரு துறை சார்பிலான அறிவிப்புகள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை கேட்டறிந்து, முதல்வருக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X