பொது செய்தி

தமிழ்நாடு

சொன்னா கேளுங்க... மது வேண்டாங்க

Added : அக் 08, 2021
Share
Advertisement
கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மரக்காலாட்டம், என பல கிராமிய கலைகளுடன் கிராமிய பாடல்கள் பாடி, பொதுமக்கள் மத்தியில் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தற்போதுள்ள சூழலில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். ஏன்...பெண்கள் கூட பொது இடங்களில் மது குடிப்பதை காண முடிகிறது.மதுவிலக்கை பல தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும்,
 சொன்னா கேளுங்க... மது வேண்டாங்க

கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மரக்காலாட்டம், என பல கிராமிய கலைகளுடன் கிராமிய பாடல்கள் பாடி, பொதுமக்கள் மத்தியில் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தற்போதுள்ள சூழலில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். ஏன்...பெண்கள் கூட பொது இடங்களில் மது குடிப்பதை காண முடிகிறது.மதுவிலக்கை பல தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும், மதுக்கடைகளை மூட சொல்லி அவ்வப்போது தாய்மார்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பலருக்கும் அவற்றின் மேல் இருக்கும் மோகம் குறையவில்லை.மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கங்கை கருங்குயில் கலைக்குழுவினர், சரஸ்வதி கிராமிய கலை குழுவினர் மற்றும் கோவை விழிப்புணர்வு கலைக்குழுவினர் இணைந்து, கிராமிய கலைகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.கோவை மாவட்ட கலால் துறை சார்பில் நடந்த நிகழ்வுகளில், கள்ளச்சாராயம், மதுபானத்தின் தீமைகள் குறித்து 30 இடங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிகழ்ச்சியை கண்டு வீடு திரும்பிய பிறகும், மனதுக்குள் ரீங்காரமிட்டது கலைஞர்களின் அந்த, 'சொன்னா கேளுங்க...மதுவே வேணாங்க' பாடல்!மது அருந்தினால் அனைத்தும் நாசம்!மது அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், மாரடைப்பு ஏற்பட்டு உடனடி மரணம் சம்பவிக்கும், நரம்புத்தளர்ச்சி, கை, கால் நடுக்கம், பசியின்மை, நினைவாற்றல் குறையும், பார்வை பறிபோகும், ஜீரண சக்தி குறையும், மலட்டுத்தன்மை உண்டாகும், பண கஷ்டம் ஏற்படும், குடும்பச்சண்டை ஏற்படும், உறவினர் சுற்றத்தாரின் உறவுகள் பாதிக்கப்படும், பிள்ளைகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும், அவப்பெயர் உண்டாகும், போன்ற கருத்துக்களை கிராமியப்பாடல் வாயிலாக கூறி அனைவரின் கவனத்தையும் கலைக்குழுவினர் கவர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X