பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகள் ரயில்களை மூன்று முறை இயக்க வர்த்தக சங்கம் கோரிக்கை

Added : அக் 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : பொதுமக்கள் நலன் கருதி ராமேஸ்வரம்--மதுரை பயணிகள் ரயிலை முன்பு போல் மூன்று முறை இயக்க வேண்டும், என மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:கொரோனா பாதிப்பால் கடந்த ஓராண்டிற்கும் மேலாக ராமேஸ்வரம்--மதுரை, மதுரை--ராமேஸ்வரம் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் : பொதுமக்கள் நலன் கருதி ராமேஸ்வரம்--மதுரை பயணிகள் ரயிலை முன்பு போல் மூன்று முறை இயக்க வேண்டும், என மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.

தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:கொரோனா பாதிப்பால் கடந்த ஓராண்டிற்கும் மேலாக ராமேஸ்வரம்--மதுரை, மதுரை--ராமேஸ்வரம் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரு மார்க்கத்தில் இருந்தும் தலா மூன்று முறை இயக்கப்பட்ட இந்த பயணிகள் ரயில்களால் அதிகளவில் சாதாரண மக்கள் பயனடைந்து வந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட மக்கள், வேலை, வியாபாரம், மருத்துவம், கல்வி என அனைத்து வகையிலும் மதுரையை சார்ந்துள்ளனர். பஸ்களில் அதிக கட்டணம், நெரிசல்காரணமாக பயணிகள் ரயில் சேவையை அதிகம் பயன்படுத்தி வந்தனர். நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவையை மீண்டு தொடங்க தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் முதல் ஒரு முறை மட்டுமே சென்று வரும் வகையில் கூடுதல் கட்டணத்துடன் ராமேஸ்வரம்- -மதுரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் காலை 5:40க்கு புறப்பட்டு பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு, மதுரை ஜங்ஷனில் நிறுத்தப்படுகிறது. மறு மார்க்கத்திலும் இதே போல் இயக்கப்படுகிறது.எனவே, பொதுமக்களின் நலன் கருதி முன்பு போல் குறைந்த கட்டணத்தில் இரு மார்க்கத்திலும் தலா மூன்று முறை பயணிகள் ரயில் இயக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X