சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட்டார கல்வி அலுவலர் மீண்டும் பணி இடைநீக்கம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
வேடசந்துார்:வேடசந்துார் வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் இரண்டாவது முறையாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியத்தில் நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் அருண்குமார். 2018 ல் குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலராக சேர்ந்தார். பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 23.8.2018ல் தற்காலிகபணி நீக்கம்
 வட்டார கல்வி அலுவலர் மீண்டும் பணி இடைநீக்கம்

வேடசந்துார்:வேடசந்துார் வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் இரண்டாவது முறையாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியத்தில் நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் அருண்குமார். 2018 ல் குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலராக சேர்ந்தார். பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 23.8.2018ல் தற்காலிகபணி நீக்கம் செய்யப்பட்டார். நான்கு மாதங்கள் கழித்து 29.11.2018ல் மீண்டும் வேடசந்துார் வட்டார கல்வி அலுவலராக பணியை தொடர்ந்தார்.

அங்கும் மூன்று தலைமை ஆசிரியைகள் வாட்ஸ் அப், பேஸ் புக் ஆதாரங்களுடன்அவர் மீது பாலியல் புகார் எழுப்பினர். இதையடுத்து வேடச்சந்துார் கல்வி மாவட்ட அலுவலர் கீதா, ஆசிரியைகள் மற்றும் அதிகாரி அருண்குமாரிடம் விசாரணை நடத்தி முதன்மைகல்வி அலுவலர் கருப்பசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

அதனடிப்படையில் கல்வி அலுவலர் அருண்குமார் மீண்டும் தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டு உள்ளார்.கல்வி அலுவலர் கீதாவிடம் கேட்டபோது, ''இரு தரப்பிலும் விசாரித்துஅறிக்கை அனுப்பினேன். அதனடிப்படையில் சி.இ.ஓ., வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X