கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மேல்முறையீடு செய்யாத 552 கைதிகள் உயர்நீதிமன்றத்தில் தகவல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
மதுரை : தண்டனையை எதிர்த்து 552 கைதிகள் மேல்முறையீடு செய்யவில்லை என சட்டப் பணிகள் ஆணைக்குழு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தது. செங்கோட்டை கற்குடி பதிபூரணம் 52. இவர் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு, கொலை செய்ததாக 1994ல் செங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர். திருநெல்வேலி நீதிமன்றம் 1996ல் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சட்ட உதவி மையம் வழக்கறிஞர்


மதுரை : தண்டனையை எதிர்த்து 552 கைதிகள் மேல்முறையீடு செய்யவில்லை என சட்டப் பணிகள் ஆணைக்குழு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தது. செங்கோட்டை கற்குடி பதிபூரணம் 52. இவர் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு, கொலை செய்ததாக 1994ல் செங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திருநெல்வேலி நீதிமன்றம் 1996ல் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சட்ட உதவி மையம் வழக்கறிஞர் மூலம் பதிபூரணம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.ஏற்கனவே விசாரணையின் போது மனுதாரர் தரப்பு: மேல்முறையீடு செய்ய சட்ட உதவி இல்லாததால் பல கைதிகள் சிறையில் வாடுகின்றனர். அவ்விபரங்களை சேகரித்து கைதிகளுக்கு சட்ட உதவி வழங்க மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு வழிகாட்டுதல்களை இந்நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என தெரிவித்தது.

நீதிபதிகள்: கைதிகளுக்கு மேல்முறையீடு செய்ய சட்டப்பூர்வ உரிமை உண்டு. அனைத்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அதிகாரிகள் மத்திய சிறை, திறந்தவெளி சிறைகளில் ஆய்வு செய்ய வேண்டும். தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாத கைதிகளின் விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு அமர்வு நேற்று விசாரித்தது.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு,'சிறைகளில் 3538 தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் 552 பேர் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை,' என அறிக்கை தாக்கல் செய்தது.நீதிபதிகள்: 552 பேரில் எத்தனை பேர் மேல்முறையீடு செய்ய விரும்புகின்றனர் என சட்டப் பணிகள் ஆணைக்குழு அக்.,25 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X