சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் இருந்து வந்தது நுரையீரல்: சென்னை வாலிபருக்கு மறுவாழ்வு

Added : அக் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:மதுரையில் இருந்து 76 நிமிடத்தில் கொண்டு வரப்பட்ட நுரையீரலால் சென்னையைச் சேர்ந்த 34 வயது நபருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.மதுரையைச் சேர்ந்த 29 வயது நபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து வாலிபரின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் அளிக்க
 மதுரையில் இருந்து வந்தது நுரையீரல்: சென்னை வாலிபருக்கு மறுவாழ்வு

சென்னை:மதுரையில் இருந்து 76 நிமிடத்தில் கொண்டு வரப்பட்ட நுரையீரலால் சென்னையைச் சேர்ந்த 34 வயது நபருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த 29 வயது நபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து வாலிபரின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் அளிக்க முன்வந்தனர். அதன்படி இதயம், கல்லீரல், நுரையீரல், கண்கள் சிறுநீரகங்கள் தானமளிக்கப்பட்டன.
இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த 34 வயது நபர் நுரையீரல் பாதிப்புடன் வடபழநி போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உடனடியாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.எனவே மதுரை வாலிபரின் நுரையீரலை சென்னை நபருக்கு பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி மதுரையில் இருந்து சாலை மற்றும் ஆகாயம் மார்க்கமாக 425 கி.மீ. பயணித்து 76 நிமிடத்தில் நுரையீரல் போர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.உடனடியாக மருத்துவமனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கோவினி பாலசுப்பிரமணி தலைமையிலான டாக்டர்கள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இதன் வாயிலாக சென்னை வாலிபருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jafar - tutucorin,இந்தியா
09-அக்-202108:48:30 IST Report Abuse
jafar வெரி குட் ஒர்க்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X