பூச்செடி வைத்த ஊராட்சி நிர்வாகம் அவற்றை பராமரிக்க மறந்தது ஏனோ

Added : அக் 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக நுழைவு வாசலில் கண்கவர் வண்ண மலர் செடிகள், குரோட்டன்ஸ் அமைத்து 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் ஒன்று கூட அங்கு இல்லாததால் அரசு நிதி ஊராட்சி நிர்வாகத்தால் வீணடிக்கப்பட்டுள்ளது.ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலக மெயின் நுழைவு வாயிலில் சாலையின் இருபுறமும் செம்பருத்தி, இட்லி பூ உள்ளிட்ட பல்வேறு மலர்


ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக நுழைவு வாசலில் கண்கவர் வண்ண மலர் செடிகள், குரோட்டன்ஸ் அமைத்து 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் ஒன்று கூட அங்கு இல்லாததால் அரசு நிதி ஊராட்சி நிர்வாகத்தால் வீணடிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலக மெயின் நுழைவு வாயிலில் சாலையின் இருபுறமும் செம்பருத்தி, இட்லி பூ உள்ளிட்ட பல்வேறு மலர் செடிகளும், அழகிய குரோட்டன்ஸ் வளர்க்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.இதையடுத்து பட்டணம்காத்தான் ஊராட்சி சார்பில்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் இருபுறமும் மலர் செடிகளை அமைக்கும் பணியில்செப்.23ல் ஈடுபட்டனர்.கூடுதல் கலெக்டர் பிரவின் குமார் இதனை துவக்கி வைத்தார்.

இருபுறமும் முதற்கட்டமாக இங்கு 250 மலர் செடிகள் வைக்கப்பட்டன.ஆனால் இவை திறந்தவெளியில் அடைப்பு இன்றி வைக்கப்பட்டதால் அப்போதே இதன் பாதுகாப்பு கேள்விக்குறியானது. தற்போது இங்கு வைக்கப்பட்ட 250 மலர் செடிகளில் ஒன்று கூட இல்லை. அவற்றை யாரோ வேரோடு எடுத்துச் சென்றுள்ளனர்.ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் கலெக்டர்அலுவலக நுழைவு வாயிலை அழகுபடுத்தும் திட்டம் கனவாகியுள்ளது. ஊராட்சி நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X