92 வயது பாட்டியை எரித்து கொன்ற பேரன்

Added : அக் 08, 2021 | |
Advertisement
தஞ்சாவூர்:தஞ்சை அருகே 92 வயது மூதாட்டியை எரித்துக் கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் - தனலட்சுமி தம்பதி மகன் அஜித் 26. இவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நிலையில் பாட்டி செல்லம்மாள் 92 வளர்த்து வந்தார்.வாதநோயால் பாதிக்கப்பட்ட செல்லம்மாளை அஜித் கூலிவேலை செய்து பராமரித்து வந்தார். இந்நிலையில்

தஞ்சாவூர்:தஞ்சை அருகே 92 வயது மூதாட்டியை எரித்துக் கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் - தனலட்சுமி தம்பதி மகன் அஜித் 26. இவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நிலையில் பாட்டி செல்லம்மாள் 92 வளர்த்து வந்தார்.வாதநோயால் பாதிக்கப்பட்ட செல்லம்மாளை அஜித் கூலிவேலை செய்து பராமரித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அஜித் வீட்டின் முன் பகுதியில் நெருப்பு புகைந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.அங்கு எரிந்த நிலையில் செல்லம்மாள் இறந்து கிடந்தார். வீட்டில் உள்ள பொருட்களும் எரிந்து கிடந்தன. பேராவூரணி போலீசார் அஜித்திடம் விசாரணை நடத்தினர்.

வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்த பார்த்த போது பாட்டி செல்லம்மாள் இறந்து கிடந்ததாகவும் சாமிகிட்ட கேட்டபோது எதையும் வைக்காமல் எரித்து விடு என கூறியதால் வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் பாட்டியோடு போட்டு எரித்து விட்டதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் அஜித் கூறினார். அஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X