சமையலர்கள் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சமையலர்கள் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை

Added : அக் 08, 2021
Share
சென்னை:சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டது.'சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள், சமையல் உதவியாளர்களின் ஓய்வு வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும்' என்று சட்டசபையில், செப்., 7ல் முதல்வர் அறிவித்தார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

சென்னை:சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டது.
'சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள், சமையல் உதவியாளர்களின் ஓய்வு வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும்' என்று சட்டசபையில், செப்., 7ல் முதல்வர் அறிவித்தார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அரசாணையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டார். இந்த அரசாணை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. அதனால், தற்போது பணியில் இருக்கும் 29 ஆயிரத்து 137 சமையலர்கள்; 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்கள் பயன்பெறுவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X