டிரினிட்டி - ஹலசூருமெட்ரோ ரயில் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டிரினிட்டி - ஹலசூருமெட்ரோ ரயில் நிறுத்தம்

Added : அக் 08, 2021
Share
பெங்களூரு-டிரினிட்டி சதுக்கம் - ஹலசூரு மெட்ரோ நிலையங்களுக்கு இடையே பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால் இன்று மாலை 4:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நேற்று வெளியிட்ட அறிக்கை:டிரினிட்டி - ஹலசூரு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே பழுது பார்க்கும் பணிகள்

பெங்களூரு-டிரினிட்டி சதுக்கம் - ஹலசூரு மெட்ரோ நிலையங்களுக்கு இடையே பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால் இன்று மாலை 4:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நேற்று வெளியிட்ட அறிக்கை:டிரினிட்டி - ஹலசூரு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே பழுது பார்க்கும் பணிகள் நடக்கவுள்ளது. எனவே எம்.ஜி.சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பையப்பனஹள்ளி ரயில் நிலையம் வரை இன்று மாலை 4:00 மணி முதல் அக்டோபர் 10ல் காலை 6:00 மணி வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.இந்த நேரத்தில் எம்.ஜி.சாலை, கெங்கேரி வரை மட்டுமே மெட்ரோ ரயில் போக்குவரத்து இருக்கும். பழுது பணிகள் முடிந்த பின் ரயில் போக்குவரத்து வழக்கம் போன்று துவங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X