பொது செய்தி

இந்தியா

பண்டத்தில் கரப்பான் பூச்சி ரூ.55 ஆயிரம் நிவாரணம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
பெங்களூரு-ஜாமுனில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்த வழக்கில், 55 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு காந்திநகரில் உள்ள காமத் ஓட்டலில் 2016 செப்டம்பர் 15ல் ராஜண்ணா என்பவர், தன் நண்பருடன் 'ஜாமூன்' என்ற இனிப்பு பண்டத்தை வாங்கினார். அதில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது.இதனால் மனம் நொந்த அவர், மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில்

பெங்களூரு-ஜாமுனில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்த வழக்கில், 55 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு காந்திநகரில் உள்ள காமத் ஓட்டலில் 2016 செப்டம்பர் 15ல் ராஜண்ணா என்பவர், தன் நண்பருடன் 'ஜாமூன்' என்ற இனிப்பு பண்டத்தை வாங்கினார். அதில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது.இதனால் மனம் நொந்த அவர், மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தார். தீர்ப்பாயமும், காமத் ஓட்டலுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது.இரண்டு ஆண்டாக ஓட்டல் சார்பில் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.இறுதியில் மனுதாரருக்கு 55 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதை எதிர்த்து, கர்நாடக மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில், ஓட்டல் நிர்வாகம் மேல் முறையீடு செய்தது.இம்மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பாயம் மாவட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவை நேற்று முன் தினம் உறுதி செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X