குளோனிங் தென்னங்கன்று விஞ்ஞானிகள் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'குளோனிங்' தென்னங்கன்று விஞ்ஞானிகள் அசத்தல்

Added : அக் 08, 2021
Share
திருவனந்தபுரம்:பெல்ஜியம் விஞ்ஞானிகள், 'குளோனிங்' எனப்படும் படிம தொழில்நுட்பத்தில் முதன் முறையாக தென்னங்கன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கே.யு.லியுவன் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பார்ட் பனிஸ், ஹன்னஸ் வில்ம்ஸ் ஆகியோர், பூச்சி தாக்குதல் இல்லாமல் விரைவாக வளரும் தென்னைகளுக்கான, குளோனிங் தென்னங்கன்றை உருவாக்கியுள்ளனர்.இது

திருவனந்தபுரம்:பெல்ஜியம் விஞ்ஞானிகள், 'குளோனிங்' எனப்படும் படிம தொழில்நுட்பத்தில் முதன் முறையாக தென்னங்கன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கே.யு.லியுவன் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பார்ட் பனிஸ், ஹன்னஸ் வில்ம்ஸ் ஆகியோர், பூச்சி தாக்குதல் இல்லாமல் விரைவாக வளரும் தென்னைகளுக்கான, குளோனிங் தென்னங்கன்றை உருவாக்கியுள்ளனர்.

இது குறித்து பார்ட் பனிஸ் கூறியதாவது:வாழைக் கன்றுகளை குளோனிங் செய்யும் பணியில் ஈடுபட்ட போது தான், இதேபோல தாவர ஹார்மோனை பயன்படுத்தி, குளோனிங் தென்னங் கன்றை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.ஆனால், குளோனிங் தென்னை மரங்களை உருவாக்குவது மிகக் கடினமான காரியம் எனலாம். ஏனெனில், தென்னை மரங்களின் வேர்கள் பரந்து விரியாமல், செங்குத்தாக ஆழமாக செல்லக் கூடியவை.

இந்த பண்பு மாறாமல் வளரக் கூடிய தென்னை மரங்களை உருவாக்குவது எங்களுக்கு சவாலாக இருந்தது. நாங்கள் பல்வேறு பருவ நிலைகளில் வளரும் தாவரங்களின் ஆய்வில் உள்ளதால், இந்த சவாலை ஏற்று செயல்படுத்தினோம்.இந்த ஆய்வில் தேங்காயில் இருந்து தேங்காய் கருவை பிரித்து அதில், தாவர வளர்ச்சிக்கான ஹார்மோனை் செலுத்தினோம். இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து குளோனிங் தென்னையின் வேர்கள் செங்குத்தாக மட்டுமின்றி பரவிப் படரும் வகையில் ஆய்வை மேம்படுத்தி வெற்றி கண்டோம்.இந்த குளோனிங் தென்னைக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளோம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோர், சிறிய தென்னை விவசாயிகளுக்கு நியாயமான விலையில் குளோனிங் தென்னங் கன்றுகளை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை காப்புரிமை விண்ணப்பத்தில் சேர்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X