யாருடைய வாசலிலும் நிற்கவில்லை:'மாஜி' ம.ஜ.த., அமைச்சர் கோபம்!

Added : அக் 08, 2021
Share
Advertisement
ஹாசன்-''ம.ஜ.த.,வை நம்புங்கள், எங்கள் கட்சிக்கு வாருங்கள் என, யாருடைய வீட்டு வாசலுக்கும் சென்று நிற்கவில்லை,'' என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா தெரிவித்தார்.ஹாசனில் அவர் நேற்று கூறியதாவது:மாநிலத்தில் பா.ஜ., அரசு ஆட்சிக்கு வர காரணமாக இருந்ததே குமாரசாமி தான்.இவரது போட்டோவை, பா.ஜ., தலைவர்கள் தங்களின் வீடுகளில், வைத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் அவருக்கு, நன்றிக்கடன்

ஹாசன்-''ம.ஜ.த.,வை நம்புங்கள், எங்கள் கட்சிக்கு வாருங்கள் என, யாருடைய வீட்டு வாசலுக்கும் சென்று நிற்கவில்லை,'' என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா தெரிவித்தார்.ஹாசனில் அவர் நேற்று கூறியதாவது:மாநிலத்தில் பா.ஜ., அரசு ஆட்சிக்கு வர காரணமாக இருந்ததே குமாரசாமி தான்.இவரது போட்டோவை, பா.ஜ., தலைவர்கள் தங்களின் வீடுகளில், வைத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் அவருக்கு, நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும்.பா.ஜ.,வில் உள்ள அனைவரும் கெட்டவர்கள் அல்ல. ஆனால் பலருக்கு பண போதை, அதிகார ஆசை உள்ளது. எனவே ஏதேதோ பேசுகின்றனர்.எடியூரப்பா முதல்வராக, ஹாசனுக்காக என்ன செய்துள்ளார். பா.ஜ., - எம்.எல்.ஏ., இருந்தும் கூட, மாவட்டத்தில் ஒரே ஒரு மேம்பாலம் கட்டவில்லை. ஒரு விடுதி கட்டவில்லை. மதுபான கடைக்கு லைசென்ஸ் கொடுத்ததே இவரது சாதனை.மக்கள் நன்றாக குடித்து, ஆரோக்கியத்தை காப்பாற்றிக்கொள்ளட்டும். வயல், தோட்டங்கள், வீடு, மனைவியின் தாலியை அடகு வைத்து, குடித்து தள்ளாடட்டும்.இவர்கள் மக்களின் அபிவிருத்திக்காக, ஆட்சிக்கு வரவில்லை. பொய்யான நம்பிக்கைகளை கொடுத்து, மக்களை கண்ணீரில் கை கழுவ வைத்துள்ளனர்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X