எஸ்.ஐ., வேலை தருவதாக ரூ.18 லட்சம் மோசடி| Dinamalar

எஸ்.ஐ., வேலை தருவதாக ரூ.18 லட்சம் மோசடி

Added : அக் 08, 2021 | |
சதாசிவ நகர்-எஸ்.ஐ., வேலை வாங்கி தருவதாக 18 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக பெங்களூரு சதாசிவ நகர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சதாசிவ நகரை சேர்ந்தவர் புட்டராஜு, 55. இவரது மகன் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.ஆனாலும் கிருஷ்ணப்பா, 45 என்பவர், புட்டராஜுவிடம் உங்கள் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதோடு சீனிவாஸ்

சதாசிவ நகர்-எஸ்.ஐ., வேலை வாங்கி தருவதாக 18 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக பெங்களூரு சதாசிவ நகர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சதாசிவ நகரை சேர்ந்தவர் புட்டராஜு, 55. இவரது மகன் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.ஆனாலும் கிருஷ்ணப்பா, 45 என்பவர், புட்டராஜுவிடம் உங்கள் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதோடு சீனிவாஸ் என்பவரிடம் அறிமுகப்படுத்தினார்.வேலை வாங்கி தர, 55 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என பேரம் பேசப்பட்டது. முன் பணமாக 18 லட்சம் ரூபாயை, கிருஷ்ணப்பா மூலம் பசவராஜ் கொடுத்தார்.அதன்பின், கிருஷ்ணப்பாவின் மற்றொரு நண்பர் பசவராஜுவிடம் சென்று, போலீஸ் எஸ்.ஐ., வேலைக்கு தேர்வு பாரபட்சமின்றி நடக்கும். பணம் கொடுத்தால் வேலை வாங்க முடியாது. நீங்கள் மோசம் போய் விட்டீர்கள் என எச்சரித்தார்.இதனால் கிருஷ்ணப்பாவுக்கு எதிராக பசவராஜு, சதாசிவ நகரில் மோசடி புகார் செய்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X