'ஆன்லைன்' விளையாட்டு இருவர் மீது வழக்கு

Added : அக் 08, 2021 | |
Advertisement
அன்னபூர்னேஸ்வரி நகர்-ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.'ட்ரீம் 11' என்ற மொபைல் போன் செயலி, விளையாட்டு ரசிகர்களை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில், பணம் கட்டி தான் விளையாட முடியும்.ஒரு கிரிக்கெட் போட்டி தொடங்கும் அதே நேரத்தில், ஒரு ட்ரீம் லெவன் போட்டியும் தொடங்கும். அது

அன்னபூர்னேஸ்வரி நகர்-ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.'ட்ரீம் 11' என்ற மொபைல் போன் செயலி, விளையாட்டு ரசிகர்களை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில், பணம் கட்டி தான் விளையாட முடியும்.ஒரு கிரிக்கெட் போட்டி தொடங்கும் அதே நேரத்தில், ஒரு ட்ரீம் லெவன் போட்டியும் தொடங்கும். அது முடிந்தால், இதுவும் முடிந்துவிடும்.ஹாக்கி, கால்பந்து விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டை தான், ரசிகர்கள் இதில் விளையாடுகின்றனர்.இந்த விளையாட்டு செயலி மூலம் ஏராளமானோர் பணத்தை இழந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில் பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் மஞ்சுநாத், 35 என்பவர், ட்ரீம் 11 ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.புகாரில் கூறியுள்ளதாவது:ட்ரீம் 11 எனும் ஆன்லைன் விளையாட்டு மூலம் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க முடியும் என்று அதன் உரிமையாளர்கள் பவித் சேட், ஹரிஷ் ஜெயின் ஆகிய இருவரும் துாண்டி விடுகின்றனர்.மக்களை ஆசை காட்டி ஏமாற்றுகின்றனர். எனவே ஆன்லைன் விளையாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பவித் சேட், ஹரிஷ் ஜெயின் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X