சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவு

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்காத, உடுமலை அரசு மருத்துவமனை டாக்டர் மீது, ஆர்.டி.ஓ., விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவை சேர்ந்தவர் மருதமுத்து மனைவி ராஜராஜேஸ்வரி, 24. கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செப்., 23ம் தேதி, திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.உடுமலை அரசு மருத்துவமனையில்

திருப்பூர்:கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்காத, உடுமலை அரசு மருத்துவமனை டாக்டர் மீது, ஆர்.டி.ஓ., விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவை சேர்ந்தவர் மருதமுத்து மனைவி ராஜராஜேஸ்வரி, 24. கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செப்., 23ம் தேதி, திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.உடுமலை அரசு மருத்துவமனையில் நான்கு நாட்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை.

தனியார் மருத்துவமனைக்கு சென்றதும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காத டாக்டர் ஜோதிமணியே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கலெக்டரிடம் புகார் அளித்தனர். கலெக்டர் வினீத் கூறியதாவது: புகார் குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி, முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டு உள்ளது. முதல்கட்டமாக, சம்பந்தப்பட்ட டாக்டர் தாராபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X