திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை

Added : அக் 08, 2021
Share
Advertisement
கலபுரகி-திருமணமான ஆறு மாதத்தில் இளம் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கலபுரகி பிரகதி நகரை சேர்ந்தவர் லோகேஷ், 27. அரசு பஸ் டிரைவரான இவருக்கும், சுகுணா, 22 என்பவருக்கும் ஆறு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.திருமணத்துக்கு பின், லோகேஷ் தனிக்குடித்தனம் சென்றார். அவர்களுடன் அவர்தம்பியும் தங்கி இருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவர் வீட்டில் இல்லாத

கலபுரகி-திருமணமான ஆறு மாதத்தில் இளம் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கலபுரகி பிரகதி நகரை சேர்ந்தவர் லோகேஷ், 27. அரசு பஸ் டிரைவரான இவருக்கும், சுகுணா, 22 என்பவருக்கும் ஆறு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.திருமணத்துக்கு பின், லோகேஷ் தனிக்குடித்தனம் சென்றார். அவர்களுடன் அவர்தம்பியும் தங்கி இருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சுகுணா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது பெற்றோர், கலபுரகி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதில், 'திருமணத்தின்போது 120 கிராம், தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் கொடுக்கப்பட்டன. அதன்பிறகு லோகேஷ் என் மகளிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தார். 'அவரது தம்பியும் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து என் மகளை கொன்று துாக்கிட்டது போல நாடகமாடி உள்ளனர்' என, கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X