வேலைவாய்ப்பு பதிவு பள்ளியிலே செய்யலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு பதிவு பள்ளியிலே செய்யலாம்

Added : அக் 08, 2021
Share
சென்னை-பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு, கடந்த 4ம் தேதி முதல், அந்தந்த பள்ளிகளில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே,

சென்னை-பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு, கடந்த 4ம் தேதி முதல், அந்தந்த பள்ளிகளில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே, மதிப்பெண் சான்றிதழ் பெறும் மாணவர்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டையுடன் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவை செய்து கொள்ளலாம்.அதேபோல், http://tnvelaivaaippu.gov.in/ என்ற வேலைவாய்ப்பு இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என, சென்னை கலெக்டர் விஜயராணி தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X