பொது செய்தி

தமிழ்நாடு

நவம்பரில் 'அரியர்' எழுதலாம்: சென்னை பல்கலை அறிவிப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை-'கடந்த, 2014க்கு முன் பட்டப்படிப்புகளில், 'அரியர்' வைத்துள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற, நவம்பர் தேர்வு இறுதி வாய்ப்பாகும்' என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பல்கலை மற்றும் அதற்கு உட்பட்ட கல்லுாரிகளில், 2014ம் ஆண்டுக்கு முன் இளநிலை, முதுநிலை, தொழிற்கல்வி மற்றும் மேலாண்மை

சென்னை-'கடந்த, 2014க்கு முன் பட்டப்படிப்புகளில், 'அரியர்' வைத்துள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற, நவம்பர் தேர்வு இறுதி வாய்ப்பாகும்' என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பல்கலை மற்றும் அதற்கு உட்பட்ட கல்லுாரிகளில், 2014ம் ஆண்டுக்கு முன் இளநிலை, முதுநிலை, தொழிற்கல்வி மற்றும் மேலாண்மை படிப்பு முடித்த மாணவர்களுக்கு, ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்கள் அடுத்த மாதம் நடக்கும் தேர்வில் பங்கேற்க, சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.அந்த மாணவர்களுக்கு அரியர் தேர்வை முடிக்க, இதுவே கடைசி வாய்ப்பு. அரியர் வைத்துள்ள மாணவர்கள், சம்பந்தப்பட்ட தேர்வு பிரிவை அணுகி, தற்போதைய பாடத் திட்டத்துக்கு இணை சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.தேர்வு எழுத விரும்புவோர், வரும் 29ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த கால கட்டத்தில் விண்ணப்பிக்காதவர்கள், 30ம் தேதி முதல், நவ., 5 வரை கூடுதல் கட்டணத்துடன் விண்ணப்பிக்க முடியும். விபரங்களை, www.unom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X