விமான நிலையத்தில் கண்ணை கவரும் கொலு!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விமான நிலையத்தில் கண்ணை கவரும் கொலு!

Added : அக் 08, 2021
Share
சென்னை--நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு, பயணியரை வெகுவாக கவர்ந்து வருகிறது.நவராத்திரி பண்டிகை கடந்த 7ம் தேதி துவங்கியது. 15ம் தேதி விஜயதசமி வரை, நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.பண்டிகையின் போது, கோவில்கள் மற்றும் வீடுகளில் பூஜைகளும், வழிபாடுகளுமாக விமரிசையாக இருக்கும். மேலும், கொலு

சென்னை--நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு, பயணியரை வெகுவாக கவர்ந்து வருகிறது.நவராத்திரி பண்டிகை கடந்த 7ம் தேதி துவங்கியது. 15ம் தேதி விஜயதசமி வரை, நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.பண்டிகையின் போது, கோவில்கள் மற்றும் வீடுகளில் பூஜைகளும், வழிபாடுகளுமாக விமரிசையாக இருக்கும். மேலும், கொலு பொம்மைகளும் வைக்கப்படும்.கொலு வைத்து நவராத்திரி நாளில் வழிபட்டால், அந்த வீட்டில் சர்வ மங்களமும் பெருகும் என்பது ஐதீகம்.நவராத்திரியை கொண்டாடும் வகையில், சென்னை விமான நிலையத்திலும் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை, பயணியரை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X