கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் உறவினர் கொலை நான்கு பேருக்கு ஆயுள் சிறை

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் உறவினர் கொலை வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூர், மண்ணரை கருமாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி, 47. இவர், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மைத்துனி பத்மினியின் மருமகன். திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். 2018 ஜூன் 25ல் அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றது.

திருப்பூர்:முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் உறவினர் கொலை வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர், மண்ணரை கருமாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி, 47. இவர், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மைத்துனி பத்மினியின் மருமகன். திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். 2018 ஜூன் 25ல் அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றது. மேட்டுப்பாளையம் அருகே அவரை காருக்குள் கொலை செய்த கும்பல், சடலத்தை ஓசூர் அருகே கொலவரப்பள்ளி அணையில் வீசி சென்றது.

விசாரணையில், தொழில் போட்டியால், சிவமூர்த்தியின் நண்பர் கோவை கணபதியைச் சேர்ந்த விமல், 35, கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிந்தது. அவருடன், மூர்த்தி, 40; கவுதமன், 22; மணிகண்டன், 22 ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. ஆள் கடத்தலுக்கு 10 ஆண்டு சிறை, கூட்டு சதிக்கு 10 ஆண்டு, தடயத்தை மறைக்க முயற்சித்த குற்றத்துக்கு மூன்று ஆண்டு மற்றும் கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி சொர்ணம் நடராஜன் நேற்று தீர்ப்பு கூறினார். நான்கு பேரும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X