பொது செய்தி

தமிழ்நாடு

குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை-திருச்சி, ராம்ஜி நகர் கொள்ளையர் மற்றும் ஆட்டோவில் நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடிகளை கைது செய்த போலீசாரை பாராட்டி, கமிஷனர் சான்றிதழ் வழங்கினார்.சில தினங்களுக்கு முன், மெரினா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன், எஸ்.ஐ., மாரியப்பன் உள்ளிட்ட போலீசார், அப்பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக

சென்னை-திருச்சி, ராம்ஜி நகர் கொள்ளையர் மற்றும் ஆட்டோவில் நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடிகளை கைது செய்த போலீசாரை பாராட்டி, கமிஷனர் சான்றிதழ் வழங்கினார்.சில தினங்களுக்கு முன், மெரினா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன், எஸ்.ஐ., மாரியப்பன் உள்ளிட்ட போலீசார், அப்பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக மின்னல் வேகத்தில் சென்ற ஆட்டோவை மடக்கினர்.தப்பி ஓடிய, ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த அருண், 22, உள்ளிட்ட ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர்.மயிலாப்பூர், நொச்சி நகரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் கொலைக்கு பழிக்கு பழியாக, அவரது தந்தை முருகேசன் உள்ளிட்ட ஐந்து பேரும், எதிரியை தீர்த்துக்கட்ட ஆட்டோவில், நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ஐந்து பேரையும் கைது செய்து, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, மிகவும் பிரபலமாக பேசப்படும் திருச்சி, ராம்ஜி நகர் கொள்ளையர்கள், சென்னை அண்ணா நகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இவர்களில், எட்டு பேரை அண்ணா நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், எஸ்.ஐ., ராஜேஷ் மற்றும் போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 25. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 23.மென்பொருள் நிறுவன ஊழியரான இவர்கள், சென்னை பெரும்பாக்கத்தில் தங்கி உள்ளனர். அப்பகுதியில், சாலை ஓரத்தில் கிடந்த, 5 சவரன் நகையை அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.குற்றவாளிகளை கைது செய்த போலீசார் மற்றும் நேர்மையாக செயல்பட்டு நகையை ஒப்படைத்த, சீனிவாசன், பாலசுப்பிரமணி ஆகியோரை கமிஷனர் சங்கர் ஜிவால், நேற்று முன்தினம் வேப்பேரியில் உள்ள தன் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X