மத்திய திட்டப் பணி: ஆய்வு செய்ய குழு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய திட்டப் பணி: ஆய்வு செய்ய குழு

Added : அக் 08, 2021
Share
சென்னை:மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் செயல்படுத்துவதை கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் துணைத் தலைவராகவும் ஊரக

சென்னை:மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் செயல்படுத்துவதை கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் துணைத் தலைவராகவும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் உறுப்பினர் செயலராகவும் உள்ளனர்.

மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ள லோக்சபா எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம், ஆ.ராசா, செல்வராஜ், நடராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், ரவீந்திரநாத்குமார், நவாஸ்கனி; ராஜ்யசபா எம்.பி.க்கள் சிவா, ஆர்.எஸ்.பாரதி, bநவநீதகிருஷ்ணன்,எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன்மவுலானா, செங்கோட்டையன்; அரசுத் துறை செயலர்கள் துறைத் தலைவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், வங்கியாளர் குழு, மேலாண்மை இயக்குனர் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக்குழு மத்திய திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையை மதிப்பாய்வு செய்யும். மேலும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதி நிலைமையை ஆராயும். திட்டங்களை சரியான நேரத்தில் செயல் படுத்த உள்ள தடைகளை போக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X