அரசியல் செய்தி

தமிழ்நாடு

97,700 தங்க காசு வாங்க ரூ.378.80 கோடி ஒதுக்கீடு

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக அரசின் நிதி உதவி திட்டத்தில் பெண்களுக்கு தலா 8 கிராம் தங்கம் வழங்க 378.80 கோடி ரூபாயில் 97 ஆயிரத்து 700 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.தமிழக அரசு சார்பில் ஐந்து வகையான திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இந்த திட்டங்களில் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் பட்டம் அல்லது டிப்ளமா பெற்றவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய்; மற்றவர்களுக்கு 25

சென்னை:தமிழக அரசின் நிதி உதவி திட்டத்தில் பெண்களுக்கு தலா 8 கிராம் தங்கம் வழங்க 378.80 கோடி ரூபாயில் 97 ஆயிரத்து 700 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
தமிழக அரசு சார்பில் ஐந்து வகையான திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இந்த திட்டங்களில் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் பட்டம் அல்லது டிப்ளமா பெற்றவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய்; மற்றவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.கடந்த நிதியாண்டில் திருமண உதவி திட்டங்களின் கீழ் 1.08 லட்சம் பேர் பயனடைந்தனர்.

நடப்பாண்டு இத்திட்டத்திற்காக 762.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.தற்போது தலா 8 கிராம் எடை உடைய 94 ஆயிரத்து 700 தங்க நாணயங்கள் வாங்க சமூக நலத்துறை சார்பில் 378.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு டெண்டர்கோரப்பட்டுள்ளது. இதற்கான நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X