பரத் சிக்சர்... பெங்களூரு 'திரில்' வெற்றி: கடைசி பந்தில் டில்லி தோல்வி

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021
Share
Advertisement
துபாய்-டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், கடைசி பந்தில் பரத் சிக்சர் அடிக்க, பெங்களூரு அணி 7 விக்கெட்டில் 'திரில்' வெற்றி பெற்றது.ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு, ரிஷாப் பன்டின் டில்லி அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே 'பிளே ஆப்' சுற்றுக்கு சென்று விட்டன. 'டாஸ்' வென்ற

துபாய்-டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், கடைசி பந்தில் பரத் சிக்சர் அடிக்க, பெங்களூரு அணி 7 விக்கெட்டில் 'திரில்' வெற்றி பெற்றது.



latest tamil news


ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு, ரிஷாப் பன்டின் டில்லி அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே 'பிளே ஆப்' சுற்றுக்கு சென்று விட்டன. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.


பிரித்வி 'வேகம்'

டில்லி அணிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 66 பந்தில் 88 ரன் சேர்த்த போது, ஹர்ஷல் படேல் 'வேகத்தில்' தவான் (43) வெளியேறினார். பிரித்வி 48 ரன் எடுத்தார். கேப்டன் ரிஷாப் பன்ட் (10), கிறிஸ்டியனிடம் சிக்கினார்.ஹெட்மயர், ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்தனர். கிறிஸ்டியன் வீசிய 15 வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடித்தார் ஹெட்மயர். மறுபக்கம் ஸ்ரேயாஸ் 18 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். முகமது சிராஜ் வீசிய கடைசி பந்தில் ஹெட்மயர் (29) அவுட்டானார். டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது. ரிபல் படேல் (7) அவுட்டாகாமல் இருந்தார்.


பரத் அபாரம்

பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல் (0), கோஹ்லி (4) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. டிவிலியர்ஸ் 26 ரன் எடுத்தார். பின் இணைந்த ஸ்ரீகர் பரத், மேக்ஸ்வெல் ஜோடி அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல போராடியது. பரத் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டன.அவேஷ் கான் வீசிய முதல் மூன்று பந்தில் பவுண்டரி உட்பட 7 ரன் எடுத்த மேக்ஸ்வெல், அரைசதம் கடந்தார். அடுத்த இரு பந்தில் பரத் 3 ரன் எடுத்தார். கடைசி பந்தில் 5 ரன் தேவை என்ற நிலையில் பரத், ஒரு 'சூப்பர்' சிக்சர் அடிக்க, பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்து 'திரில்' வெற்றி பெற்றது. பரத் (78), மேக்ஸ்வெல் (51) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil news



'பிளே ஆப்' எப்போது

ஐ.பி.எல்., தொடரின் 'பிளே ஆப்' சுற்றுக்கு டில்லி (20 புள்ளி), சென்னை (18), பெங்களூரு (18), கோல்கட்டா (14) அணிகள் முன்னேறின.இதன் படி* நாளை நடக்கும் தகுதிச்சுற்று 1ல் (துபாய்), புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெற்ற டில்லி-சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும்.* 'எலிமினேட்டர்' போட்டியில் 3, 4வது இடம் பெற்ற பெங்களூரு-கோல்கட்டா (அக். 11, சார்ஜா) மோதும். தோற்கும் அணி வெளியேறும்.* தகுதிச்சுற்று 1ல் தோற்ற, 'எலிமினேட்டரில்' வென்ற அணிகள் தகுதிச்சுற்று 2ல் (அக். 13, சார்ஜா), மோதும்.* தகுதிச்சுற்று 1, 2ல் வென்ற அணிகள் அக். 15ல் துபாயில் நடக்கும் பைனலில் பலப்பரீட்சை நடத்தும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X