பொது செய்தி

இந்தியா

பயனர் கட்டணம் இனி கட்டாயம்: ரயில் நிலையங்களில் விரைவில் அமல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
பெரிய ரயில் நிலையங்களை பயன்படுத்தும் பயணியரிடம் விரைவில்,'பயனர் கட்டணம்' வசூலிக்கப்பட உள்ளது. பத்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரை, இந்தக் கட்டணம் இருக்கும். முதல் வகுப்பு 'ஏசி' பெட்டியில் பயணம் செய்வோருக்கு அதிகமாகவும், அதைத் தொடர்ந்து, 'ஏசி' இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, படுக்கை வசதி பெட்டி மற்றும் முன்பதிவில்லா பெட்டிக்கு என அடுத்தடுத்த நிலையில் கட்டணம்

பெரிய ரயில் நிலையங்களை பயன்படுத்தும் பயணியரிடம் விரைவில்,'பயனர் கட்டணம்' வசூலிக்கப்பட உள்ளது.

பத்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரை, இந்தக் கட்டணம் இருக்கும். முதல் வகுப்பு 'ஏசி' பெட்டியில் பயணம் செய்வோருக்கு அதிகமாகவும், அதைத் தொடர்ந்து, 'ஏசி' இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, படுக்கை வசதி பெட்டி மற்றும் முன்பதிவில்லா பெட்டிக்கு என அடுத்தடுத்த நிலையில் கட்டணம் வசூலிக்கப்படும்.ரயில் நிலையங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும்; அதன் வாயிலாக, பயனர்களுக்கு செய்து தரப்படும் வசதிகள் மேம்பட வேண்டும்என்ற நோக்கத்தில், பயனர் கட்டணம் வசூலிக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களை தரம் உயர்த்துவது என்பது, தேசிய பணமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதி. தனியார் நிறுவனங்களோடு இணைந்து, ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் நிலையில், அரசுக்கு 76 ஆயிரத்து 250 கோடி ரூபாய் வரவு கிடைக்கும் என்று, 'நிடி ஆயோக்' அமைப்பு எதிர்பார்க்கிறது. மும்பை மற்றும் டில்லி ரயில் நிலையங்களில் துவங்கப்படும் பயனர் கட்டணம் முறை, முதற்கட்டமாக, 50 ரயில் நிலையங்களில் நடைமுறைக்கு வரும்.

பின்னர், படிப்படியாக நாடெங்கும் உள்ள 400 பெரிய ரயில் நிலையங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.பயனர் கட்டணம், ரயில் டிக்கெட் வாங்கும் போதே சேர்த்துக் கொள்ளப்படும். ஏறும் இடமும், இறங்கும் இடமும் பெரிய ரயில் நிலையங்களாக இருந்தால், இரண்டு இடங்களுக்கும் கட்டணம் உண்டு.

வழியில் வரும் சிறு ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்து ஏறினால், கட்டணம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.தரம் உயர்த்தப்படும் பட்டியலில் உள்ள ரயில் நிலையங்களில் மட்டுமே, பயனர் கட்டணம் வசூலிக்கப்படுமா அல்லதுதரம் உயர்த்தப்பட்ட பின், பயனர் கட்டணம் கேட்கப்படுமா என்பது குறித்து, விரைவில் வெளியாக இருக்கும் ரயில்வே அறிவிப்பில் தெளிவாகும்.விமான நிலையங்களைப் பயன்படுத்துவோரிடம், ஏற்கனவே இதுபோன்ற பயனர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
-- நமது நிருபர் - -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X