பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி - கோதாவரி இணைப்பு ஆந்திரா, தெலுங்கானாவுக்கு தமிழகம் கடிதம்

Updated : அக் 09, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: 'காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.கர்நாடகா, சத்தீஸ்கர், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாயும் கோதாவரி ஆற்றில், ஆண்டுதோறும் 300 டி.எம்.சி.,க்கு மேலான மழைநீர் கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை, ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி,
காவிரி - கோதாவரி இணைப்பு  ஆந்திரா, தெலுங்கானாவுக்கு தமிழகம் கடிதம்

சென்னை: 'காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.கர்நாடகா, சத்தீஸ்கர், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாயும் கோதாவரி ஆற்றில், ஆண்டுதோறும் 300 டி.எம்.சி.,க்கு மேலான மழைநீர் கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை, ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள வறட்சி மாவட்டங்களுக்கு திருப்பி விட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.


மத்திய அரசு முடிவு



தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இத்திட்டத்திற்கு, 86 ஆயிரத்து 962 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதுகுறித்து விரிவான திட்ட அறிக்கையை தேசிய நதி நீர் மேம்பாட்டு முகமை தயாரித்து, தமிழகம் மட்டுமின்றி கோதாவரி பாயும் மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
இத்திட்டத்தின்படி, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திரா வழியாக 1,200 கி.மீ.,க்கு கால்வாயும், 19 கி.மீ.,க்கு சுரங்கமும் வெட்டப்பட உள்ளன. இதில் கால்வாய் மட்டும், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில், காவிரி ஆற்றுடன் இணைக்கப்பட உள்ளது.


முழு ஒத்துழைப்பு



இந்த திட்டம் நிறைவேறினால், காவிரியில் மட்டுமின்றி, வேலுாரில் வறண்டு கிடக்கும் பாலாற்றிலும் நீரோட்டம் கிடைக்கும். எனவே, இத்திட்டத்திற்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் கட்டளை கதவணை வரை கால்வாய் வெட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு, கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ஒத்துழைப்பு கிடைத்தால், இத்திட்டத்தை மத்திய அரசால் செயல்படுத்த முடியும். விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டு, பல மாதங்கள் கடந்தும், இரண்டு மாநிலங்களும் மவுனமாக உள்ளன.

எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு கேட்டு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் வாயிலாக, இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதம் எழுதி 15 நாட்கள் ஆகியும் பதில் இல்லை. எனவே, அடுத்த கட்டமாக, இரண்டு மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, தமிழக அதிகாரிகள் குழுவை, அம்மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
09-அக்-202109:12:36 IST Report Abuse
duruvasar பாத்துக்க. பழைய நினைப்பில் வேல்முருகன், திருமாவளவனும் இணைந்து இருகுழல் துப்பாக்கியாக களத்தில் இறங்கி போராட்டத்தை துவக்கிய போறாங்க. கண்டிசனா சொல்லிடுங்க. அதுபோக கடிதம் தாய்மொழியில் தானே எழுதியிருக்கீங்க. இரு முதல்வர்களுமே மனவாடு தான். தங்களுக்கு தெரியாத ராஜதந்திரம் எதுவுமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X