பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசு வெடிக்க நேரம் விரைவில் அரசு அறிவிப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:'தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக, முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கூறியதாவது:தீபாவளி பண்டிகை, நவம்பர் 4ல் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது மக்களின் வழக்கம்.ஆனால், பட்டாசு வெடிப்பதால், சுற்றுச்சூழல் மாசு அடைவதாகக் கூறி, 2018

சென்னை:'தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக, முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கூறியதாவது:தீபாவளி பண்டிகை, நவம்பர் 4ல் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது மக்களின் வழக்கம்.ஆனால், பட்டாசு வெடிப்பதால், சுற்றுச்சூழல் மாசு அடைவதாகக் கூறி, 2018 முதல் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க, உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றை தமிழக அரசு பின்பற்றும்.பட்டாசு தொடர்பாக குறும்படம் வழியே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை நிர்ணயிப்பது குறித்து, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X