பொது செய்தி

தமிழ்நாடு

மார்பக புற்று நோய் சுய பரிசோதனை:

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை-மார்பக புற்றுநோய் குறித்து, பெண்கள் தாங்களே சுய பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டுவதற்காக, அப்பல்லோ புற்று நோய் மருத்துவமனை சார்பில், இணையதள சேவை துவங்கப்பட்டுள்ளது.இந்தியாவில், ஒவ்வொரு நான்கு நிமிட கால அளவில், ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்.அதேபோல், 13 நிமிட கால அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதன்படி, 29 பெண்களில் ஒருவர், மார்பக புற்றுநோயால்

சென்னை-மார்பக புற்றுநோய் குறித்து, பெண்கள் தாங்களே சுய பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டுவதற்காக, அப்பல்லோ புற்று நோய் மருத்துவமனை சார்பில், இணையதள சேவை துவங்கப்பட்டுள்ளது.இந்தியாவில், ஒவ்வொரு நான்கு நிமிட கால அளவில், ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்.அதேபோல், 13 நிமிட கால அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதன்படி, 29 பெண்களில் ஒருவர், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். இவர்களில் பெரும்பாலானோர், புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாத நிலை உள்ளது.இந்நிலையில், மார்பக புற்றுநோய் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தாங்களே எப்படி சுய பரிசோதனை மேற்கொள்வது என்பது குறித்து வழிக்காட்டுவதற்கும், https://apollocancercentres.com என்ற இணையதள சேவை துவக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை, நடிகை குஷ்பு, அப்பல்லோ மருத்துவமனைகள் குழும துணை தலைவர் பிரீத்தா ரெட்டி ஆகியோர் துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில், அப்பல்லோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:இந்தியாவில் 2030ம் ஆண்டு காலகட்டத்தில், தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதில், மார்பக புற்று நோய் போன்றவை முக்கிய பங்கு வகிக்கும். பெண்கள் பல்வேறு துறையில் முன்னேற்றம் அடைந்தாலும், மார்பக புற்று நோயை எப்படி கண்டறிவது என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.எனவே, அப்பல்லோ புற்று நோய் மருத்துவமனை சார்பில், இந்த இணையதள சேவை துவங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.துணை தலைவர் பிரீத்தா ரெட்டி கூறுகையில், ''இந்தியாவில், 70 சதவீத பெண்கள் புற்று நோய் முற்றிய நிலையில் தான் வருகின்றனர். அவர்கள் ஆரம்ப நிலையில், உரிய டாக்டரை அணுகினால், புற்றுநோயை குணப்படுத்த முடியும்,'' என்றார்.நடிகை குஷ்பு கூறியதாவது:மார்பக புற்று நோயை வெளியே கூறவும், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளவும் பெண்களிடம் தயக்கம் உள்ளது. இதுபோன்ற தயக்கத்தை தவிர்த்து, மார்பக சுய பரிசோதனை செய்து, அறிகுறிகள் இருந்தால், டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும்.தாய்மார்கள் பாதிப்பு குடும்பத்தையும் பாதிக்கும் என்பதால், மார்பக புற்று நோய் குறித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், வீட்டில் உள்ள ஆண்களும் சம பங்கு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X