பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கையில் முகவர்களை அனுமதிப்பதில் சர்ச்சை:கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிக்கை

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை,-'ஊரக உள்ளாட்சி தேர்தலின், ஓட்டு எண்ணிக்கையில், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்' என, தேர்தல் அதிகாரிகளுக்கு, வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில்

சென்னை,-'ஊரக உள்ளாட்சி தேர்தலின், ஓட்டு எண்ணிக்கையில், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்' என, தேர்தல் அதிகாரிகளுக்கு, வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பதிவான ஓட்டுகள், கிழக்கு தாம்பரம், பாரத மாதா தெருவில் உள்ள, ஜெயகோபால் கரோடியா மேல்நிலை பள்ளியில் எண்ணப்பட உள்ளன.ஓட்டு எண்ணிக்கையின் போது, வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் சேர்த்து இருக்க வேண்டிய முகவர்கள் குறித்த கட்டுப்பாடுகளை, தேர்தல் நடத்தும் அலுவலரும், பரங்கிமலை வட்டார வளர்ச்சி அலுவலருமான சிவகலைச்செல்வன், நேற்று வெளியிட்டுள்ளார்.அதில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கு, வேட்பாளர்களுடன் சேர்த்து 35 பேரும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வேட்பாளர்களுடன் சேர்த்து 35 பேரும் இருக்கலாம்.கிராம ஊராட்சி தலைவர்களுக்கு, ஊராட்சிகளின் ஓட்டு விகித்திற்கேற்ப, குறைந்தது இரண்டு பேர், அதிகபட்சம் 25 பேர் வரை என, ஒவ்வொரு வேட்பாளர்களுடன் குறைந்தது 20 முதல் 35 முகவர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டிருந்தது.அதே நேரம், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மட்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது வேட்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, வேட்பாளர்கள் சிலர் கூறியதாவது:மற்ற பதவிகளுக்கு வேட்பாளர்களுடன் சேர்த்து 35 பேர் அனுமதிக்கப்படும் நிலையில், வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு மட்டும், வேட்பாளர் அல்லது அவர் நியமிக்கும் நபர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டிருப்பது, அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.ஏற்கனவே, இந்த தேர்தலில் பிரதான கட்சியினர், ஓட்டுக்கு பணமும், பரிசு பொருட்களும் வழங்கி, பல குளறுபடிகளில் ஈடுபட்டுள்ளனர்.இச்சூழலில், வார்டு உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகள், அதிகாரிகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன.இந்த அறிவிப்பால், வேட்பாளர் பெண்ணாகவோ, முதியவராகவோ இருந்தால், அவர்கள் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் வந்து செல்லும்போது பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.இதை தடுக்க, வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஐந்து அல்லது ஏழு முகவர்கள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஒன்றிய செயலர் உருவாக்கிய சர்ச்சைபரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் துவங்கியது முதல், தி.மு.க., ஒன்றிய செயலர் ஜெயக்குமார், கட்சியினர் கூட்டத்தில் பேசும் போது, 'ஓட்டு எண்ணும் மையத்தில் நான் இருப்பேன்; நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். உங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க செய்வது என் வேலை. கவலை வேண்டாம்' எனக் கூறி வருவதாக கட்சியினர் சிலர் தெரிவிக்கின்றனர். அவரது பேச்சு, கட்சியினருக்கு நம்பிக்கையூட்டவா அல்லது உண்மையில் குறைந்த ஓட்டு வித்தியாசங்கள் வரும் போது, ஆளும் கட்சிக்கு சாதகமாக முடிவுகளை அறிவிக்க, அதிகாரிகளை நிர்பந்தப்படுத்தவா என, குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது, அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, செல்வாக்குள்ள சுயேச்சை வேட்பாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் நேர்மையாக தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், சில பொறுப்பாளர்களின் செயல், கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தக் கூடாது என்பதால், ஓட்டு எண்ணிக்கையை நியாயமாக நடத்த, முதல்வர் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, வேட்பாளர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X