சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

Added : அக் 08, 2021
Share
Advertisement
வடக்கு கடற்கரை--மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட 600 பேர் மீது, வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கொரோனா தொற்று பரவலை தடுக்க, மாநிலத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்படுகின்றன.இந்நிலையில், அனைத்து நாட்களிலும் கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வலியுறுத்தி, மாநிலம்

வடக்கு கடற்கரை--மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட 600 பேர் மீது, வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கொரோனா தொற்று பரவலை தடுக்க, மாநிலத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்படுகின்றன.இந்நிலையில், அனைத்து நாட்களிலும் கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வலியுறுத்தி, மாநிலம் முழுதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் முன்பு, பா.ஜ., சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சென்னை, பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணித் தலைவர் வினோஜ் பி செல்வம், மாநில பா.ஜ., செயற்குழு உறுப்பினர் தாஸ்பாண்டியன் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை, வினோஜ் பி செல்வம், தாஸ்பாண்டியன் மற்றும் 150 பெண்கள் உள்ளிட்ட 600 பேர் மீது, வடக்கு கடற்கரை போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ், நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X