பொது செய்தி

தமிழ்நாடு

'கலா உத்சவ்' போட்டி 22க்குள் முடிக்க உத்தரவு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:நடப்பு கல்வி ஆண்டுக்கான, 'கலா உத்சவ்' போட்டியை, 22ம் தேதிக்குள் முடிக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், மாணவர்களின் கலை திறனை வளர்க்க, 'கலா உத்சவ்' னும் போட்டி, தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இதற்கான மாணவர்கள், பள்ளி, மாவட்ட, மாநில அளவிலான

சென்னை:நடப்பு கல்வி ஆண்டுக்கான, 'கலா உத்சவ்' போட்டியை, 22ம் தேதிக்குள் முடிக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், மாணவர்களின் கலை திறனை வளர்க்க, 'கலா உத்சவ்' னும் போட்டி, தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இதற்கான மாணவர்கள், பள்ளி, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான கலா உத்சவ் போட்டியில், பாட்டு பாடுதல், இசைக் கருவி வாசித்தல், நடனம் உள்ளிட்ட பிரிவுகளில், ஒன்பது வகை போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட உள்ளன.அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி அளவிலான போட்டியை, வரும் 22ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளி அளவில் முதலிடம்பெறும் மாணவர்களுக்கு 27, 28ல் மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டி, சென்னை, அசோக் நகர் மகளிர் மேல்நிலை பள்ளியில் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X