பொது செய்தி

தமிழ்நாடு

சேவை துறைகள் ஒத்துழைப்பு வேண்டும்: மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சோழிங்கநல்லுார் -பருவமழையின் போது, வெள்ள தடுப்பு மீட்பு பணிக்கு, இதர அரசு துறைகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.ஓ.எம்.ஆர்., மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை உள்ளடக்கிய, சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. இந்த மண்டலத்தில், ஏரிகள், குளங்கள் மற்றும் பகிங்ஹாம் கால்வாய் உள்ளது.சேலையூர், மேடவாக்கம்,
 சேவை துறைகள் ஒத்துழைப்பு வேண்டும்: மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள்

சோழிங்கநல்லுார் -பருவமழையின் போது, வெள்ள தடுப்பு மீட்பு பணிக்கு, இதர அரசு துறைகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஓ.எம்.ஆர்., மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை உள்ளடக்கிய, சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. இந்த மண்டலத்தில், ஏரிகள், குளங்கள் மற்றும் பகிங்ஹாம் கால்வாய் உள்ளது.சேலையூர், மேடவாக்கம், அகரம்தென், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வடியும் மழை நீர், சோழிங்கநல்லுார் மண்டலம் வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைந்து, கடலில் கலக்கிறது.இதனால், இதர பகுதி களை விட, சோழிங்கநல்லுார் மண்டலத்தில், வெள்ள தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மழைக்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளின் கலந்தாலோசனை கூட்டம், மண்டல அலுவலக வளாகத்தில், சிறப்பு அதிகாரியான, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுப்பணிதுறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் வாரியம், தொலைத்தொடர்பு துறை, குடிநீர் வாரியம், காவல்துறை, தீயணைப்பு துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.மழைக்கால வெள்ள தடுப்பு நடவடிக்கையில், மாநகராட்சி தான் பெரும் பங்காற்றும். இதற்கு, இதர துறைகளின் ஒத்துழைப்பு தேவை.இதை கருத்தில் வைத்து, அனைத்து துறைகளின் ஆலோசனை கேட்கப்பட்டது. உபகரணங்கள் மற்றும் ஊழியர்களின் தேவை குறித்து, சில துறை அதிகாரிகள் கருத்து கூறினர்.தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வெள்ள தடுப்பு, மீட்பு நடவடிக்கைக்கான, உபகரணங்கள், ஊழியர்கள் போதுமான எண்ணிக்கையில் தயார் நிலையில் உள்ளனர்.மழையின் வேகத்தை பொறுத்து, தாழ்வான குடியிருப்பு பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். வெள்ள தடுப்பு நடவடிக்கையில் மாநகராட்சி முன்னின்று பணி செய்வதால், இதர துறைகள், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X