சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகைகளுக்கு 'ஆன்லைன் ஆர்டர்' கொடுத்து மோசடியில் ஈடுபட்ட அந்தமான் நபர் கைது

Added : அக் 08, 2021
Share
Advertisement
ராமாபுரம்--'ஆன்-லைன்' வாயிலாக நகைகளுக்கு, 'ஆர்டர்' கொடுத்து, மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, அண்ணா நகரில் உள்ள பிரபல நகைக்கடையில், அங்கத் மேத்தா என்ற பெயரில், சில வாரங்களுக்கு முன், வளையல், செயின், கம்மல் என, 9 சவரன் நகைகளுக்கு, ஆன்-லைனில் ஆர்டர் கொடுக்கப்பட்டது.சில நாட்கள் கழித்து, அக்கடை ஊழியர், நகைகளுடன் ராமாபுரத்திற்கு சென்றார். அப்போது, அங்கு வந்த

ராமாபுரம்--'ஆன்-லைன்' வாயிலாக நகைகளுக்கு, 'ஆர்டர்' கொடுத்து, மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, அண்ணா நகரில் உள்ள பிரபல நகைக்கடையில், அங்கத் மேத்தா என்ற பெயரில், சில வாரங்களுக்கு முன், வளையல், செயின், கம்மல் என, 9 சவரன் நகைகளுக்கு, ஆன்-லைனில் ஆர்டர் கொடுக்கப்பட்டது.சில நாட்கள் கழித்து, அக்கடை ஊழியர், நகைகளுடன் ராமாபுரத்திற்கு சென்றார். அப்போது, அங்கு வந்த நபர், அங்கத் மேத்தா என, அறிமுகமானார். இதை நம்பிய கடை ஊழியர், அந்த நபரிடம், 9 சவரன் நகைகளை கொடுத்தார்.நகைகளை வாங்கிய அந்த நபர், தன் மனைவியிடம் காண்பித்து விட்டு வருவதாக கூறி சென்றார். நீண்ட நேரம் ஆகியும், அவர் திரும்பவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கடை ஊழியர், ராயலா நகர் காவல் நிலையத்தில், இது குறித்து புகார் அளித்தார்.போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம், அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், கைது செய்யப்பட்டவரின் உண்மையான பெயர், சர்தாக் ராவ் பாப்ராஸ், 43 என்பதும், அந்தமானைச் சேர்ந்த அவர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி, நகை கடைகளில் ஆன்-லைன் மூலம் ஆர்டர் கொடுத்து, ஊழியர்கள் நகையை எடுத்து வரும் போது, மனைவியிடம் காண்பித்து விட்டு வருவதாக கூறி, தொடர்ந்து மோசடி செய்து வந்தது தெரியவந்தது.அப்படி ஏமாற்றிய நகைகளை விற்று, உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து, சர்தாக் ராவ் பாப்ராசை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, ஏழரை சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதேபோன்று, வேறு எந்தெந்த பகுதியில் மோசடி செய்துள்ளார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X