பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' மோசடிகள்: கமிஷனர் எச்சரிக்கை: கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை-'வங்கியில் இருந்து பேசுவது போல நடித்து, ஆன்லைன் வாயிலாக பணம் சுருட்டும் கொள்ளையர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.வங்கியில் இருந்து பேசுவது போல நடித்து, பணம் பறிக்கும் கொள்ளை கும்பல் அதிகரித்து வருகிறது. தற்போது, இந்த மோசடி கும்பல்கள், 'உங்கள் மொபைல் போன் எண்ணிற்கு, 5.70 கோடி ரூபாய்க்கு நன்கொடை

சென்னை-'வங்கியில் இருந்து பேசுவது போல நடித்து, ஆன்லைன் வாயிலாக பணம் சுருட்டும் கொள்ளையர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.வங்கியில் இருந்து பேசுவது போல நடித்து, பணம் பறிக்கும் கொள்ளை கும்பல் அதிகரித்து வருகிறது. தற்போது, இந்த மோசடி கும்பல்கள், 'உங்கள் மொபைல் போன் எண்ணிற்கு, 5.70 கோடி ரூபாய்க்கு நன்கொடை கிடைத்துள்ளது.குறுஞ்செய்திஇந்த தொகையை அனுப்பி வைக்க, பெயர், வயது, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை, tavernphilips@europe.com என்ற மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்' என்ற தகவலை, 'வாட்ஸ் ஆப்'பில் பரப்புகிறது.அதேபோல, மர்ம நபர்கள் எஸ்.பி.ஐ., வங்கியில், பான் கார்டு எண்ணை புதுப்பிக்க வேண்டும் என, https://bit.ly/3nGNu19 என்ற லிங்க் அனுப்புகின்றனர்.'பிலிப்கார்ட்' நிறுவனத்தில் முழு நேரம் மற்றும் பகுதி நேர வேலை உள்ளது. தினமும், 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். 'ஆன்லைன்' வாயிலாக பகுதி நேர வேலை உள்ளது.தினமும், 200ல் இருந்து, 2 லட்சம் ரூபாய் வரை சம்பாரிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 97318 66720 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என, அதிகளவில் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.இதன் வாயிலாக, அதிகளவில் மோசடி நடப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.'அழித்து விடுங்க'மோசடி குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:மொபைல் போன் எண்ணிற்கு, 'வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும். மொபைல் போன் எண் டி - ஆக்டிவேட் ஆகிவிடும்' என, குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் லிங்க்கை, யாரும் கிளிக் செய்யக்கூடாது.ஆன்லைன் பகுதி நேர வேலை குறித்து வரும் லிங்கை, உடனடியாக அழித்துவிடவும். வெளிநாடுகளில் தொழில் துவங்கி, அதிக லாபம் சம்பாதிக்கலாம்.எச்சரிக்கைவேலைக்கு முன் பணம் அனுப்பவும்; பரிசு பொருட்களை அனுப்ப பணம் அனுப்புங்கள். எண்ணெய், விதைகள் மற்றும் ரசாயன பொருட்கள் வாங்க வலியுறுத்தி வரும் அழைப்புகளை, முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக, வெளிநாட்டில் வசிப்பவர் என பழகும் நபர்களுடன், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இணையதளம் வாயிலாக திருமணம், மறுமணத்திற்கு வரன் தேடுவோர், பரிசு பொருள் அனுப்புவதாக கூறும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X