கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயித்ததை எதிர்த்த மனு தள்ளுபடி

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, வயது வரம்பு நிர்ணயம் செய்ததை எதிர்த்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த ஆண்டு ஜனவரியில், தமிழ்நாடு மேல்நிலை கல்வி பணி விதிகளில், சிறப்பு விதி சேர்க்கப்பட்டது. அதன்படி, ஆசிரியர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகவும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,

சென்னை:முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, வயது வரம்பு நிர்ணயம் செய்ததை எதிர்த்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஆண்டு ஜனவரியில், தமிழ்நாடு மேல்நிலை கல்வி பணி விதிகளில், சிறப்பு விதி சேர்க்கப்பட்டது. அதன்படி, ஆசிரியர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகவும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு குறித்த விளம்பரத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம், செப்., 9ல் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், வயது வரம்பு நிர்ணயம் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனால், வயது வரம்பு நிர்ணயம் தொடர்பான விதியை எதிர்த்தும், ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் வெளியிட்ட வயது நிர்ணயம் தொடர்பான பிரிவை எதிர்த்தும், 18 பேர் தாக்கல் செய்த மனு:நாங்கள் முதுகலை பட்டம் மற்றும் பி.எட்., முடித்துள்ளோம். 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஒவ்வொரு தேர்விலும் வயது வரம்பு 57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சிறப்பு விதிகள் 2020 ஜனவரியில் ஏற்படுத்தப்பட்டு, பொதுப் பிரிவினருக்கு 40; இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த மாதம் முதுநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், 45 வயதை கடந்த நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.எனவே, வயது வரம்பு நிர்ணயித்ததை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன்; அரசு சார்பில், அரசு பிளீடர் முத்து குமார் ஆஜராகினர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கொள்கை முடிவு எடுப்பது, அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது; குறிப்பிட்ட முறையில் கொள்கை முடிவு எடுக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஆசிரியர் பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட வயது வரம்பை அரசு நிர்ணயித்துள்ளது. அதை தன்னிச்சையானது என்று கூற முடியாது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X