சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச 'வீடியோ' எடுத்து மிரட்டிய வாலிபருக்கு 'காப்பு'

Added : அக் 08, 2021
Share
Advertisement
அண்ணா நகர்,-பெண்ணிடம் உல்லாசமாக இருந்த 'வீடியோ'வை காட்டி மிரட்டிய வடமாநில வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.கோல்கட்டா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த மாதம் புகார் அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது:என் கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதால், உடல்நிலை சரியில்லாத மகனுக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில்

அண்ணா நகர்,-பெண்ணிடம் உல்லாசமாக இருந்த 'வீடியோ'வை காட்டி மிரட்டிய வடமாநில வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.கோல்கட்டா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த மாதம் புகார் அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது:என் கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதால், உடல்நிலை சரியில்லாத மகனுக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் தங்கி, சிகிச்சை அளித்து வருகிறேன்.உறவினர் திருமணத்திற்காக, சென்னையில் அறிமுகமான கோல்கட்டா மாநிலத்தைச் சேர்ந்த அதானு கிஷோர் தாஸ், 31, என்பவரை, கார் டிரைவராக கோல்கட்டாவிற்கு அழைத்துச் சென்றேன். அப்போது ஏற்பட்ட பழக்கத்தால், இருவரும் உல்லாசமாக இருந்ததை 'வீடியோ' எடுத்து, தொடர்ந்து மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.புகாரை விசாரித்த அண்ணா நகர் மகளிர் போலீசார், கோல்கட்டாவில் பதுங்கியிருந்த அதானு கிஷோர் தாஸை, நேற்று கைது செய்தனர். சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X