கர்ப்பிணி போலீசாருக்கு தடுப்பூசி அவசியம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி போலீசாருக்கு தடுப்பூசி அவசியம்!

Added : அக் 08, 2021
Share
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்ததன் வாயிலாக, சென்னை போலீசில், செப்., 1 - அக்., 5 வரை, போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தார் ஒருவருக்கு கூட கொரோனா பரவவில்லை.இதுவரை, 86 சதவீதம் போலீசார் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மீதமுள்ள போலீசாரும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்ததன் வாயிலாக, சென்னை போலீசில், செப்., 1 - அக்., 5 வரை, போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தார் ஒருவருக்கு கூட கொரோனா பரவவில்லை.இதுவரை, 86 சதவீதம் போலீசார் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மீதமுள்ள போலீசாரும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் போலீசாரை, நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து வருகிறேன்.அந்த வகையில், அக்., 6ல் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த போது, போலீஸ்காரர் ஒருவரிடம், 'நீங்களும், உங்கள் குடும்பத்தாரும், இரண்டு தவணைகளும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா' என, கேட்டேன்.அதற்கு அவர், 'நான் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். மனைவி கர்ப்பமாக இருப்பதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை' என்றார்.கர்ப்பிணியர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படையில் பணிபுரியும் கர்ப்பிணி போலீசார் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதனால் கர்ப்பிணி போலீசார் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X