வருமான வரி சோதனை: எடியூரப்பாவுக்கு குறிவைப்பு?

Added : அக் 09, 2021
Share
Advertisement
பெங்களூரு:பா.ஜ., மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, அவரது மகன்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர்.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கூறி, தொழிலதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், பட்டய கணக்காளர்கள் என பலரது

பெங்களூரு:பா.ஜ., மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, அவரது மகன்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கூறி, தொழிலதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், பட்டய கணக்காளர்கள் என பலரது வீடுகள், அலுவலகங்கள் உட்பட 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருந்த போது, அவரது அந்தரங்க உதவியாளராக இருந்த உமேஷின் பெங்களூரு பாஷ்யம் நகர் வீட்டில் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நீடித்தது.எடியூரப்பா பதவியில் இருந்த போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி பல ஒப்பந்ததாரர்களிடம் இவர் லஞ்சப் பணம் பெற்றது தெரிய வந்துள்ளது. இதனால், உமேஷின் வருமானம் 300 மடங்கு உயர்ந்துள்ளது.
இது தொடர்பான விபரங்கள் 'பென்டிரைவில்' பதிவு செய்யப்பட்டிருந்ததை, வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.பி.எம்.டி.சி., ஓட்டுனர்மற்றும் நடத்துனராக இருந்த உமேஷ், 2007லிருந்து அரசியல் புள்ளிகளின் அந்தரங்க உதவியாளராக இருந்து வருகிறார். எடியூரப்பா மற்றும் அவரது மூத்த மகனும், எம்.பி.,யுமான ராகவேந்திரா ஆகியோரின் உதவியாளராக இருந்துள்ளார்.

தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை அலுவலகத்திலும் உதவியாளராக தொடர்ந்தார். ஆனால், வருமான வரித்துறை சோதனையை அடுத்து, முதல்வர் அலுவலகத்தின் பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இது போல எடியூரப்பா இளைய மகனும், மாநில பா.ஜ., துணைத் தலைவருமான விஜயேந்திராவின் நெருங்கிய நண்பர் அரவிந்துக்கு சொந்தமான வசந்த் நகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

வருமான வரித்துறை சோதனை முழுதும் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா ஆகியோரது செல்வாக்கை முடக்கும் வகையில் நடத்தப்பட்டதாக, கர்நாடக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X