பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை-சென்னையில் ஆறாவது கட்டமாக மீண்டும், 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு:சென்னையில், ஐந்து கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. இதுவரை மாநகராட்சி சார்பில், 35 லட்சத்து ஐந்து ஆயிரத்து 108 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 19 லட்சத்து 32 ஆயிரத்து 527 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என, 54

சென்னை-சென்னையில் ஆறாவது கட்டமாக மீண்டும், 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு:சென்னையில், ஐந்து கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. இதுவரை மாநகராட்சி சார்பில், 35 லட்சத்து ஐந்து ஆயிரத்து 108 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 19 லட்சத்து 32 ஆயிரத்து 527 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என, 54 லட்சத்து 37 ஆயிரத்து 635 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதேபோல், தனியார் மருத்துவமனைகள் வாயிலாக, ௭ லட்சத்து 77 ஆயிரத்து 403 முதல் தவணை தடுப்பூசி, 2 லட்சத்து 86 ஆயிரத்து 434 இரண்டாம் தவணை தடுப்பூசி என, 10 லட்சத்து 63 ஆயிரத்து 837 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக சென்னையில், 65 லட்சத்து ஆயிரத்து 472 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.கடந்த இரு மாதங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் நபர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் நபர்களில் 90 சதவீதத்திற்கு மேல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என, மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.எனவே, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்களும், 1,600 மையங்களில் நடைபெறும் மெகா முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X