வேளச்சேரி இணைப்பு சாலை பணி தென்சென்னை எம்.பி., ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளச்சேரி இணைப்பு சாலை பணி தென்சென்னை எம்.பி., ஆய்வு

Added : அக் 09, 2021
Share
வேளச்சேரி,-நம் நாளிதழ் செய்தியின் நடவடிக்கையாக, தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், தரமணி- - வேளச்சேரி இணைப்பு சாலையை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்கும்படி, தெற்கு ரயில்வே அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.சென்னை, வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும், தரமணி- - வேளச்சேரி இணைப்பு சாலை மற்றும் பாலப்பணிகள், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று

வேளச்சேரி,-நம் நாளிதழ் செய்தியின் நடவடிக்கையாக, தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், தரமணி- - வேளச்சேரி இணைப்பு சாலையை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்கும்படி, தெற்கு ரயில்வே அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.சென்னை, வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும், தரமணி- - வேளச்சேரி இணைப்பு சாலை மற்றும் பாலப்பணிகள், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தன.இது குறித்து, நம் நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், சம்பந்தப்பட்ட சாலையை நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ரயில்வே கட்டுப்பாட்டில் இருக்கும் பணிகளை முடித்து, சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்கும் படி, அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். சில பணிகள் முழுமை பெற்றவுடன், முறையாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மூன்று மாதத்திற்குள் ஒப்படைக்கப்படும் என, அதிகாரிகள் உறுதிஅளித்தனர்.இதையடுத்து, சுரங்கப்பாலத்தில் குளம்போல தேங்கியிருந்த தண்ணீரை பார்வையிட்டார். அதனை விரைவில் சரி செய்யும் படி கேட்டுக் கொண்டார். பின், 'வேளச்சேரி உயர் மட்ட மேம்பாலத்தின், வேளச்சேரி- - தரமணி பாலத்தை விரைவில் முதல்வர் திறந்து வைப்பார்' என, அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X