சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி முகத்தில் 'ஆசிட்' வீசிய கணவர் கைது

Added : அக் 09, 2021
Share
Advertisement
புதுவண்ணாரப்பேட்டை-சென்னை, தண்டையார்பேட்டை, சாஸ்திரி நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முருகன், 40. இவரின் மனைவி தமிழரசி, 30. இவர்களுக்கு 14 - 9 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த தமிழரசி, மூன்று மாதமாக அதே பகுதியில் உள்ள தன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். புதுவண்ணாரப்பேட்டையில், தமிழரசி மொபைல்போன் கடை நடத்தி வருகிறார்.மொபைல்போன் கடைக்கு

புதுவண்ணாரப்பேட்டை-சென்னை, தண்டையார்பேட்டை, சாஸ்திரி நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முருகன், 40. இவரின் மனைவி தமிழரசி, 30. இவர்களுக்கு 14 - 9 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த தமிழரசி, மூன்று மாதமாக அதே பகுதியில் உள்ள தன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். புதுவண்ணாரப்பேட்டையில், தமிழரசி மொபைல்போன் கடை நடத்தி வருகிறார்.மொபைல்போன் கடைக்கு நேற்று வந்து, 'நீ என்னுடன் வாழ மாட்டாயா' என கேட்டு, தமிழரசி முகத்தில் 'ஆசிட்' வீசினார். இதில் தமிழரசியின் முகம், கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகள் வெந்துப்போன நிலையில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X