சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேருந்து கண்ணாடியை உடைத்து கல்லுாரி மாணவர்கள் அட்டகாசம்

Added : அக் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புழல்--மாநகர பேருந்தின் கண்ணாடியை நொறுக்கி அட்டகாசம் செய்த கல்லுாரி மாணவர்களை, போலீசார் தேடுகின்றனர்.சென்னை செங்குன்றத்தில் இருந்து, நேற்று காலை 9:00 மணியளவில், 'தடம் எண் ௧௧௪' மாநகர பேருந்து கோயம்பேடுக்கு கிளம்பியது. ஓட்டுனராக சுயாட்சி என்பவரும், நடத்துனராக சிவாவும் பணியாற்றினர். புழல் நிறுத்தத்தில் ஏறிய கல்லுாரி மாணவர்கள் சிலர், படிக்கட்டில் பயணித்தனர். அவர்களை

புழல்--மாநகர பேருந்தின் கண்ணாடியை நொறுக்கி அட்டகாசம் செய்த கல்லுாரி மாணவர்களை, போலீசார் தேடுகின்றனர்.சென்னை செங்குன்றத்தில் இருந்து, நேற்று காலை 9:00 மணியளவில், 'தடம் எண் ௧௧௪' மாநகர பேருந்து கோயம்பேடுக்கு கிளம்பியது. ஓட்டுனராக சுயாட்சி என்பவரும், நடத்துனராக சிவாவும் பணியாற்றினர். புழல் நிறுத்தத்தில் ஏறிய கல்லுாரி மாணவர்கள் சிலர், படிக்கட்டில் பயணித்தனர். அவர்களை உள்ளே வருமாறு நடத்துனர் அழைத்தார்.இதை கண்டுகொள்ளாத மாணவர்கள், புழல் அடுத்த கதிர்வேடு சிக்னல் அருகே சென்ற போது, பேருந்தின் கூரை மீது ஏற முயன்றனர். ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி, அவர்களை உள்ளே வர வலியுறுத்தினார். கீழே இறங்கிய அவர்கள், கற்களை வீசி பேருந்து பின்பக்க கண்ணாடி மற்றும் பெயர் பலகை கண்ணாடியை உடைத்து அங்கிருந்து தப்பினர்.பயணியர் யாரும் பாதிக்கப்படவில்லை. தகவலின்படி புழல் போலீசார் விசாரித்ததில், வடசென்னையிலுள்ள கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் என தெரிந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
09-அக்-202107:32:59 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan சமூக நீதியில் படிக்க இடம் கொடுத்தால் இப்படித்தான் ஆடுவார்கள். கல்லெறிந்த கைகளுக்கு காப்பு மாட்டணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X