பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ திட்டங்கள்: முதல்வர் நேரில் ஆய்வு

Added : அக் 09, 2021
Share
Advertisement
போரூர்-போரூர்- - பூந்தமல்லி இடையே நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகள், கத்திப்பாரா நகர்ப் புற சதுக்கம், சென்ட்ரல் சதுக்கம் ஆகிய பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இத்துடன், சென்னை பெருநகர்

போரூர்-போரூர்- - பூந்தமல்லி இடையே நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகள், கத்திப்பாரா நகர்ப் புற சதுக்கம், சென்ட்ரல் சதுக்கம் ஆகிய பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இத்துடன், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., உதவியுடன், சென்னை சென்ட்ரலில், 389.42 கோடி ரூபாய் செலவில், சென்ட்ரல் சதுக்கம் கட்டுமான பணியும் நடந்து வருகிறது.கத்திப்பாராவில், 'நகர்ப்புற சதுக்கம்' திட்டத்தில், 14.50 கோடி ரூபாய் செலவில் பஸ் நிறுத்தம், கடைகள் உட்பட, பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.இத்திட்ட பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். மூன்று இடங்களிலும் ஆய்வின் போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் யாதவ், இயக்குனர்கள் அர்ச்சுனன், ராஜேஷ் சதுர்வேதி மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.ஆய்வின் போது, சென்ட்ரல் சதுக்கம், கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் அமைக்கும் பணிகளை, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.போரூர்- -- பூந்தமல்லி இடையே, 7.9 கி.மீ., துாரத்திற்கு இரண்டாம் கட்ட மெட்ரோரயில் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தில், போரூர்- - அய்யப்பன்தாங்கல் இடையே, தெள்ளியார் அகரம் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, தினசரி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X