சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாக்ஸ் பஸ் ஓட்டுனரை தாக்கிய இருவர் கைது

Added : அக் 09, 2021
Share
Advertisement
பஸ் ஓட்டுனரை தாக்கிய இருவர் கைதுதரமணி: மாநகர பேருந்து ஓட்டுனரை தாக்கிய சிறுவன் உள்ளிட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, சித்தாலப்பாக்கம் அடுத்த அரசன்கழனியை சேர்ந்தவர் குமார், 49; மாநகர பேருந்து ஓட்டுனர். கடந்த 4ம் தேதி, செம்மஞ்சேரியிலிருந்து கிண்டி நோக்கி மாநகர பஸ் ஓட்டி சென்றார்.அப்போது, படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் புகைப் பிடித்ததை, குமார்

பஸ் ஓட்டுனரை தாக்கிய இருவர் கைதுதரமணி: மாநகர பேருந்து ஓட்டுனரை தாக்கிய சிறுவன் உள்ளிட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, சித்தாலப்பாக்கம் அடுத்த அரசன்கழனியை சேர்ந்தவர் குமார், 49; மாநகர பேருந்து ஓட்டுனர். கடந்த 4ம் தேதி, செம்மஞ்சேரியிலிருந்து கிண்டி நோக்கி மாநகர பஸ் ஓட்டி சென்றார்.அப்போது, படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் புகைப் பிடித்ததை, குமார் கண்டித்தார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்தில் இருந்து இறங்கி சென்ற அந்த நபர், பின் இருசக்கர வாகனத்தில் நண்பருடன் வந்து, தரமணி, பாரதி நகர் பஸ் நிறுத்தத்தில், ஓட்டுனர் குமாரை தாக்கி தப்பிச் சென்றனர்.தரமணி போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா உதவியுடன் விசாரணை நடத்தினர். இதில், ஓட்டுனர் குமாரை தாக்கியது பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த, பரத்ராஜ், 19, மற்றும் உடன் வந்த சிறுவன் என்பது தெரியவந்தது. பின், அவர்களை கைது செய்து, நீதிமன்ற உத்தரவு படி, பரத்ராஜ் சிறைக்கும், சிறுவனை சிறார் சீர்த் திருத்தப் பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X