சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்தி...: மாவட்டம்

Added : அக் 09, 2021
Share
Advertisement
திருடனுக்கு நிபந்தனை ஜாமின்மதுரை: மதுரையில், நடிகர் சூரி இல்ல திருமணம் நடந்த மஹாலில், நகை திருடி கைதான விக்னேஷ் பாபு, 29, என்பவருக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் அனுமதித்தது. 'வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன்' என, உத்தரவாதம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.ஓட்டுக்கு பணம்: அ.தி.மு.க.,வினர் கைது பண்ருட்டி: கடலுார் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம்,

திருடனுக்கு நிபந்தனை ஜாமின்

மதுரை: மதுரையில், நடிகர் சூரி இல்ல திருமணம் நடந்த மஹாலில், நகை திருடி கைதான விக்னேஷ் பாபு, 29, என்பவருக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் அனுமதித்தது. 'வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன்' என, உத்தரவாதம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

ஓட்டுக்கு பணம்: அ.தி.மு.க.,வினர் கைது

பண்ருட்டி: கடலுார் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம், இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் இன்று நடக்கிறது. நேற்று மதியம் 2:00 மணியளவில் புதுப்பேட்டை போலீசார், சிறுகிராமம் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்ற கரும்பூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., கிளை செயலர் காசிநாதன், 65; ராமலிங்கம், 65; பழனிவேல், 48, ஆகியோரிடம் இருந்து 55 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றி, மூவரையும் கைது செய்தனர்.

காமுக முதியவருக்கு '20 ஆண்டு'

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நாட்ராயன், 70. இவர், கடந்தாண்டு செப்., 30ல் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய மூன்றாவது படித்த பள்ளி சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் தாய் புகாரின்படி அரவக்குறிச்சி போலீசார், நாட்ராயனை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நாட்ராயனுக்கு 20 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நசீமா பானுதீர்ப்பு அளித்தார்.

சகோதரிகள் தற்கொலை

சேலம்: சேலம், வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, 65; கணவர் இறந்து விட்டார். ஒரே மகள் திருமணமாகி சென்று விட்டார். லட்சுமியின் தங்கை சரஸ்வதி, 63; மாற்றுத் திறனாளியான இவர், திருமணம் செய்து கொள்ளவில்லை. லட்சுமியுடன் வசித்து வந்தார். வயது மூப்பு, துாக்கமின்மையால் அவதிப்பட்ட லட்சுமி, சரஸ்வதி இருவரும் நேற்று முன்தினம் இரவு, பாலில் துாக்க மாத்திரை, விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

லோடுமேனுக்கு ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் 'லோடுமேன்' பால்ராஜ், 45. இவர், 2015ல் அப்பகுதியைச் சேர்ந்த மனநிலை பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் 'போக்சோ' நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி தனசேகரன், லோடுமேன் பால்ராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சிறுமிக்கு 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, விருதுநகர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

13 வயது சிறுமி மர்ம சாவு

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, வில்லியநல்லுாரைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகள் ஷோபனா, 13; ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் வசிக்கும் மாமா பாலசுப்ரமணியன் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். நேற்று அதிகாலை, பாலசுப்ரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள வாய்க்காலில், சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குத்தாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X